Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் 100 நாள் ஆட்சியில் பங்குச்சந்தை நிலவரம்!

 மோடியின் 100 நாள் ஆட்சியில் பங்குச்சந்தை நிலவரம்!

 
மோடி பதவிக்கு வந்து இன்றோடு 100 நாட்கள் ஆகிய நிலையில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் கிட்டதட்ட இந்த 100 நாட்களில் 2100 புள்ளிகள் அதிகரித்து 27000 புள்ளிகளை தாண்டியுள்ளது. இதே போல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 600 புள்ளிகள் அதிகரித்து 8000 புள்ளிகளை தாண்டி வர்த்தகமாகிறது.
 
 
தேர்தலுக்கு முன் மோடி ஆட்சிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் தான் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது என்று கூறி வந்தார்கள். தற்போது மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன நிலையில் பங்குச்சந்தை பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. 100 நாட்களில் சந்தை சுமார் 10 சதவிகித வருமானத்தை தந்திருக்கிறது.
 
 
இதற்கு காரணமாக மோடி அரசின் பட்ஜெட் அறிவிப்புகளும் , சமீபத்தில் இந்தியாவின் உள்கட்டமைப்பில் ஜப்பான 35 பில்லியன் டாலரை முதலீடு செய்ய முன்வந்துள்ளதும் முக்கிய காரணங்களாகும். மேலும் நாட்டின் ஜிடிபி முதல் காலாண்டில் 5.7 சதவிகித அளவில் வளர்ந்துள்ளதும் பொருளாதார வளர்ச்சி எற்றம் காண ஆரம்பித்ததற்கான  அறிகுறியாக பார்க்கப் படுகிறது. மோடியின் இந்த நூறு நாள் ஆட்சி இது வரை  பங்குச் சந்தை புதிய உச்ச்ங்களை தொடுவதற்கு முக்கிய காரணம். அதே சமயம் இனி வரும் நாட்களில் அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே சந்தை மேலும் ஏற்றம் அடையும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ