Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோலார் மின் உற்பத்தி துறையில் 6.7 லட்சம் வேலைவாய்ப்புகள்

சோலார் மின்சக்தி துறையில் அடுத்த பத்து ஆண்டுகளில் 6.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. பிரிட்ஜ் டூ இந்தியா மற்றும் டாடா பவர் சோலார் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 அடுத்த பத்து வருடங்களில் சோலார் எனர்ஜி மூலம் 145GW மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும்
( ஒரு GW = 1000 MW) அதற்கு ஏற்ப 6.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. 
 
 இந்த வேலைவாய்ப்புகள் நான்கு திட்டங்கள் மூலம் உருவாகும் என்றும், அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இந்தியாவின் மின்சக்தி தேவைகள் நிறைவடையும் என்று அந்த அறிக்கை சொல்கிறது.
 
 
 குறிப்பாக சூரிய சக்தி மூலம் வீட்டு பயன்பாடு (வீட்டு மேற்கூரையில்),  பெரிய அளவிலான சோலார் மின் உற்பத்தி மேற்கூரைகள், சிறிய அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் வர்த்தக ரீதியிலான மெகா சூரிய சக்தி மின்திட்டங்கள் என நான்கு வகைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.  
 
சோலார் மூலம் மின்சாரம் எடுப்பதற்கு ரூ 6.6 ரூபாய் மட்டுமே செலவாகிறது. நிலக்கரி விலை உயர்ந்து வருவதாலும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அளவு குறைந்து வருவதாலும் இனி சோலார் மின் உற்பத்தியின் மூலமே மக்களின் மின்தேவையை பூர்த்திசெய்ய முடியும். தவிர வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி அடுத்த மூன்று வருடங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ