Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்லைன் பணப் பரிமாற்றம் 60%-ஆக அதிகரிப்பு!


இன்றைய நிலையில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பணப் பரிமாற்ற வசதிகளையே பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தவசதிகள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மற்றொருவரிடம் பணத்தை விரைவாக கொண்டு சேர்த்து விடுகிறது. கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்வது 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என ஆர்பிஐ ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் மட்டும் 47.86 லட்சம் கோடி ரூபாய் ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம் நடந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 31.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

மொத்த ஆன்லைன் பண பரிமாற்றத்தில் மொபைல் பேங்கிங் மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் 35% பண பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 10% அதிகமாகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close