Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேக்ஆஃப் வைரஸ்... கிரெடிட்/டெபிட் கார்டுகளை பத்திரமா பார்த்துக்கோங்க!

மனித உடல்களை வைரஸ் கிருமிகள் பாடாய்படுத்துவது போல, தொழில்நுட்பத்தையும் வைரஸ்கள் படுத்தி எடுக்கின்றன. சமீப காலமாகவே வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ளன இந்த வைரஸ்கள். 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் டெஸ்டர் என்கிற வைரஸ் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்களை திருடியது.

  

இதற்கு அடுத்தும் பல வைரஸ் குடும்பங்கள் பல்வேறு வகையில் கொள்ளையடிக்க ஆரம்பித்தன. அதே வரிசையில் வாடிக்கையாளர்களின் கிரடிட் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகள் தொடர்பான ரகசியத் தகவல்களை திருடும் மால்வேர் குடும்பத்தைச் சார்ந்த பேக்ஆஃப் (Backoff) வைரஸ் இந்திய இணையதளங்களில் உலா வந்து கொண்டிருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் அங்கமான சி.இ.ஆர்.டி-இன் (CERT-In) எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.



பேக்ஆஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணினிகளில் பரவி வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. குறிப்பாக பாயின்ட் ஆஃப் சேல்ஸ் எனப்படும் கடைகளில் உள்ள மின்னணு விற்பனை முனையங்களை குறிவைத்து இந்த வைரஸ்கள் செயல்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் கார்டு நம்பர், கார்டு உரிமையாளர் பெயர் போன்ற அனைத்து தகவலையும் திருகிறது. வைரஸ்களை கண்டுபிடிக்கும் ஆன்டி வைரஸ் மென்பொருட்களாலும் கண்டறிய இயலாத வகையில் இந்த பேக்ஆஃப் வைரஸ்கள் இருப்பதாகவும் சி.இ.ஆர்.டி கூறியுள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ