Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண் இயக்குநர்கள் கட்டாயம்!

என்எஸ்சி சந்தையில் பட்டியல் செய்யப்பட்டுள்ள 755 நிறுவனங்களில் பெண் இயக்குநர்களே நியமிக்கப்படவில்லை என்கின்றன புள்ளி விவரங்கள்.
 
நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது இயக்குநரவையில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.  இந்த விதிமுறைகளை கடைபிடிக்காத 1,469 நிறுவனங்களுக்கு கடந்த மாதம் செபி அறிக்கை அனுப்பியது. அப்படி இருந்தும் இன்னும் 755 நிறுவனங்கள் இந்த உத்தரவை கடை பிடிக்கவில்லை என்கிறது புள்ளி விவரங்கள்.  
 
இந்த விதிமுறையை அக்டோபர் 1 முதல் கட்டாயமாக கம்பெனிகள் கடைபிடிக்க வேண்டும் என்பதை கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. அதாவது இந்த மாத இறுதிக்குள் 755 நிறுவனங்களும் பெண் இயக்குநர்களை நியமித்தாக வேண்டும். அதாவது தினசரி 25 பெண் இயக்குநர்களை பணிக்கு அமர்த்தியாக வேண்டும் என்கிறது பிரைம் டேட்டா பேஸ் என்கிற நிறுவனம்.  
 
இந்த நிறுவனங்களில் இப்போதுவரை 244 நிறுவனங்கள் பெண் இயக்குநர்களை தேர்வு செய்து வைத்திருக்கின்ற என்றும், பணியில் அமர்த்தும் நடைமுறைகள் மேற்கொண்டு வருவதாகவும் அந்த புள்ளி விவரங்கள் சொல்கிறது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ