Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிய பசிபிக் டாப் 50 நிறுவனங்கள் பட்டியலில் 12 இந்திய நிறுவனங்கள்

  

ஆசிய பசிபிக் நாடுகளின் சிறந்த 50 நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 12 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் சிறந்த நிறுவனங்களை தரவரிசைபடுத்தி பட்டியல் வெளியிட்டு வருகிறது. தற்போது ஆசிய பசிபிக் நாடுகளின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. சந்தை மதிப்பு, பிராண்ட் இவற்றின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்த வருடம் டாப் 50 நிறுவனங்கள் என வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில்தான் இந்த நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. சீனாவிலிருந்து 16 நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளது.
 
தரப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் டிசிஎஸ், ஹெச்சிஎல், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், லுபின், எம் அண்ட் எம், மதர்ஸன் சுமி சிஸ்டம்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா மற்றும் டைட்டன். 
 
இதில் சில நிறுவனங்கள் இந்த டாப் 50 பட்டியலில் தொடர்ச்சியாகவும் இடம்பெற்று வருகின்றன. ஹெச்டிஎஃப்சி பேங்க் தொடர்ந்து எட்டு வருடங்களாகவும், டிசிஎஸ் ஏழு வருடங்களாகவும் இடம் பிடித்துள்ளன. அரசு கூட்டு இல்லாத தனியார் நிறுவனங்கள் மட்டும் இந்த தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாவும் சுமார் 1,300 நிறுவனங்கள் இந்த தேர்வுக்கு ஆய்வு செய்ததாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close