Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி வியாபாரம் 8

  கமாடிட்டி வியாபாரம் 8 

தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 

 

 


ஹெட்ஜிங் முறையும், அதன் பலன்களும்:

 

சென்ற வாரம் ஹெட்ஜிங் என்பது என்ன என்பதை விளக்கமாக பார்த்தோம்.  ஹெட்ஜிங் செய்வதன் மூலமாக நாம் நமக்கு வரக்கூடிய இடர்பாடுகளை எவ்வாறு தவிர்க்காலாம் என்றும் பார்த்தோம்.  இனி ஹெட்ஜிங் செய்யக்கூடிய பல்வேறு சூழலை பற்றி பார்க்கலாம்.

நீங்கள் ஒரு உற்பத்தியாளாராக பார்க்கலாம்.

நீங்கள் உருளைக்கிழங்கை சாகுபடி செய்யும் ஒரு விவசாயியாக பாஎக்கலாம்.  உருளைக்கிழங்கை பயிர்செய்து, பின் அது முதிர்வுற்று பின்பு அறுவடை செய்யும் காலம் என்று பார்த்தால் சுமார் 4 – 6 மாதங்கள் ஆகும்.  அதாவது ஒவ்வொரு இடத்தின் வெப்பநிலையை பொருத்து அதன் காலம் மாறலாம்.  நம் எடுத்துக்காட்டில் 4 – 6 மாதம் என்ற கால அளவை எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது விலைக்கு வருவோம். பொதுவாக ஒரு பொருள் உற்பத்தி செய்யும் காலகட்டத்தில், அந்த பொருள் சந்தையில் அதிகம் கிடைக்காது, எனவே அப்போது விலை அதிகமாக இருக்கும்.  மாறாக அந்த பொருள் உற்பத்தியாகி, அறுவடையாகி சந்தைக்கு வரும்போது, சந்தையில் பொருளின் புழக்கம்கூடி விலை குறைய ஆரம்பிக்கும்.  பொதுவாக இது டிமான்ட் மற்றும் சப்ளை என்ற கூற்றின் அடிப்படையில் விலை நகரும் என்று படித்திருப்போம் அல்லவா!

கமாடிட்டி சந்தை என்பதே டிமாண்ட் அன்ட் சப்ளை பொருத்த விஷயம்.  டிமாண்ட் கூடும்போது, விலை கூடும்.  சப்ளை கூடும்போது விலை குறையும்.  எல்லா சூழலிலும் இந்த அடிப்படை கோட்பாட்டைதான் பயன்படுத்தபோகிறோம். ஆகவேதான் இதை கொஞ்சம் அழுத்தம் திருத்தமாக உங்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

 

இப்போது நம்முடைய எடுத்துக்காட்டான உருளைக்கிழங்குக்கு வருவோம்.  உருளைக்கிழங்கின் பயிரிடும் காலம் 4 – 6 மாதம் என்று பார்த்தோம்.  இந்த எடுத்துக்காட்டில், நீங்கள் ஒரு விவசாயியாக ஆகஸ்ட் மாதத்தில் உருளைக்கிழங்கை பயிரிட ஆரம்பிப்பதாக வைத்துக்கொள்வோம்.  இந்த பயிர் வளர ஆரம்பித்து அறுவடை செய்யும் காலம் டிசம்பர் என்று வைத்துக்கொள்வோம்.


இனி...


இந்த காலகட்டத்தில், உருளைக்கிழங்கின் விலை எவ்வாறு நகர்கிறது என்று பார்ப்போம்.  ஆகஸ்ட் மாதத்தில் பயிரிடப்படும் காலம் என்பதால், சந்தையில் உருளைக்கிழங்கின் வரத்து குறைவாக இருக்கும்.  அதாவது, சப்ளை குறைவாக இருக்கும், சப்ளை குறைவாக இருப்பதால் டிமான்ட் கூடுதலாக இருக்கும்.  இந்த நிலை உருளைக்கிழங்கின் விலையை உயர வழிவகுக்கும்.  இந்த நிலையில் பாதுக்காத்து வைக்கப்பட்ட உருளைகிழங்குகள் சந்தைக்கு வரும்.  மேலும், உருளைக்கிழங்கு என்பது, குறிப்பிட்ட சீதோஷன நிலையில்தான் நன்கு வளரும்.  எனவே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு கால கட்டத்தில் உருளைக்கிழங்கு பயிரிடப்படும்.  இதனால், அறுவடையான பகுதியில் இருந்து, இப்போதுதான் பயிரிட ஆரம்பித்து பகுதிக்கு உருளைக்கிழங்கு கொண்டுவரப்படும்.  இந்த விஷயங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு இப்போது விலைநகர்வை ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கலாம்.

நாம் இப்போது ஆகஸ்ட் மாதம் பயிரிடுபவராக இருந்து இந்த விலை நகர்வை பார்க்கலாம்.  நாம் பயிரிடும்போது, சந்தையில் உருளைக்கிழங்கு அதிகவிலையில் வியாபாரம் ஆவதாக எடுத்துக்கொள்ளலாம்.  பொதுவாக உருளைக்கிழங்கை 100கிலோ என்ற எடைக்கு விலை நிர்ணயிக்கப்படுவதாக எடுத்துக்கொள்வோம்.  எனவே ஆகஸ்ட் மாதத்தில் 100கிலோ எடையுள்ள உருளைக்கிழங்கு ரூ.1500 என்ற விலைக்கு வியாபாரம் ஆவதாக எடுத்துக்கொள்வோம்.  உருளைக்கிழங்கை விவசாயம் பண்ணும் நாம், இந்த விலையை மனதில் வைத்துக்கொண்டு பயிரிட ஆரம்பிக்கிறோம்.  அந்த விலையையே மனதில் வைத்து மற்ற செலவுகளான உரம், பூச்சிக்கொல்லி போன்ற செலவுகளையும் செய்வதாக வைத்துக்கொள்வோம்.  மற்ற நடைமுறை செலவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நாம் ஒரு கணக்கு போடுகிறோம்.  அந்த கணக்கின்படி நம்முடைய அடக்கவிலை என்பது 100 கிலோ உருளைகிழங்குக்கு ரூ.1250 வருவதாக வைத்துக்கொள்வோம். 

இதை எளிமையாக புரிந்தகொள்ள நாம் உருளைக்கிழங்கு விலையை ஒரு கிலோ என்ற விலைக்கு மாற்றிக்கொள்வோம்.  எனவே, தற்போதைய உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.15 விலைக்கு வியாபாரம் ஆகிறது.  நாம் பயிரிட்டு பின் அறுவடை செய்யும்போது, இதன் அடக்கவிலை ரூ.12.50 ஆக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம்.  நம் கணக்கின்படி நாம் பயிரிட்டு உள்ள அளவின்படி அறுவடையில்போது, 10000 கிலோ உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக நினைக்கிறோம்.  எனவே, நம் கணக்கின்படி, அறுவடை முடிந்து 10000 கிலோ உருளைக்கிழங்கை, ஒரு கிலோ ரூ.15/- என்ற விலைக்கு விற்க திட்டமிட்டுள்ளோம். இந்த கணக்கின்படி ஒரு கிலோ உருளைக் கிழங்குக்கு ரூ.2.50 லாபமாக கிடைக்கும்.  ஆக 10000 கிலோ உருளைக்கிழங்கை விற்கும் போது மொத்த லாபம் (10000 X 2.50) ரூ.25000 கிடைக்கும்.

இந்த கணக்கு நமக்கு தெளிவாக புரிந்துள்ளதல்லவா!

 

உருளைக்கிழங்கை பயிரிடும் நாம் ரூ.25000 லாபத்தை எதிர்பார்த்து பயிரிடும் வேலையில் ஈடுபடுவதாக வைத்து கொள்ளலாம். ஆகஸ்ட் மாதம் நாம் செலவு செய்ய ஆரம்பித்து இருக்கிறோம். நவம்பர் மாதம் முடிந்து டிசம்பர் மாத ஆரம்பத்தில் நாம் உருளைக்கிழங்கை அறுவடை செய்ய ஆரம்பிக்கிறோம்.  இந்த நிலையில் சந்தையில் உருக்கிழங்கின் விலை படிப்படியாக குறைய ஆரம்பிக்கிறது.  நாம் விவசாயம் செய்ய ஆரம்பிக்கும்போது, ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை ரூ.15 இருந்தது. இப்போது, விலை குறைந்து ரூ.14 விலையில் இருப்பதை பார்கிறோம்.  நமக்குள் ஒரு மணி அடிக்க ஆரம்பிக்கிறது. அறுவடைவேலையை அவசரம் அவசரமாக செய்கிறோம். அறுவடை முடியும்போது ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை ரூ.13 மாக குறைகிறது.  நாலைந்து மாதமாக விவசாயம் செய்த நமக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. அறுவடை செய்த உருளைக்கிழங்கை சந்தைக்கு அவசரம் அவசரமாக எடுத்து செல்கிறோம்.  நாம் எடுத்து சென்று சந்தையில் விற்க்கும்பது ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை ரூ.12.50 ஆக குறைகிறது.  

இப்போது நம் மனது கணக்கு போடுகிறது.  இதுவரை உருளைக்கிழங்கை உற்பத்தி செய்வதற்க்கு ஆன செலவு, ஒரு கிலோவிற்க்கு ரூ.12.50 ஆகும்.  இப்போது அறுவடைக்கு பின்பு விற்க வரும்போது, அதன் விலையும் ரூ.12.50 ஆகவே உள்ளது.  உற்பத்தி விலைக்கே நாம் பொருளை விற்றால், நமக்கு லாபம் இல்லை.  மனது கிடந்து அல்லாடுகிறது.  இந்த நாலுமாத உழைப்பிற்கு பிறகு நமக்கு கிடைப்பது, ஒன்றும் இல்லை என்று ஆகிறது.

மனம்  குழப்பதில் உள்ளது.

சந்தைக்கு கொண்டுவந்ததை மீண்டும் எடுத்துக்கொண்டு போய் பின்பு விலை ஏறியபின் கொண்டுவரலாம் என்று நினைத்தால், டிரான்ஸ்போட் கூலியை நினைத்தால் தலையை சுற்றுகிறது.

இப்போது பொருளை திரும்ப கொண்டுபோனால், அதற்கு ஒரு கூலி கொடுக்கவேண்டும்.  பின்பு மீண்டும் சந்தைக்கு கொண்டுவர இன்னும் ஒருமுறை கூலி கொடுக்கவேண்டும்.  ஒருவேளை அப்போது உருளைக்கிழங்கின் விலை ஒரு கிலோ ரூ.12.50 ஆகவே இருந்தால், போக்குவரத்து செலவு நட்டத்தில் கொண்டுபோய்விடும்.

ஒருவேளை உருளைக்கிழங்கின் விலை இன்னும் குறைந்து ஒரு கிலோ ரூ.10 இருந்தாலும், உள்ளதும் போச்சுடா.......... என்று புலம்ப வேண்டும்.

என்ன செய்வது?

பொருளை திரும்ப எடுத்துக்கொண்டு போய் பின்பு, வியாபாரம் செய்யலாம் என்று நினைத்து காத்திருந்தால், அது இன்னும் பெரிய நட்டத்தில் கொண்டுபோய்விடுமோ என்ற பயம் மேலிடுகிறது.


சரி, போட்ட காசையாவது எடுப்போம் என்று உருளைக்கிழங்கை பயிரிட்டு, நான்குமாதம் செலவு செய்து பின்பு சந்தைக்கு கொண்டுபோய், அடக்க விலையையிலேயே விற்றுவிடுகிறோம்.

நமக்கு எந்த ஆலோசனை பயனளிக்கும்?


ஹெட்ஜிங்............


அப்படினா?  இது நம் கேள்வி?  

 


அப்படினா... நாம உருளைக்கிழங்கை விவசாயம் செய்ய ஆரம்பிக்கும்போது, ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.15/- என்ற விலையில் இருந்தது.  நாம அடக்கவிலை கணக்குபோட்டப்ப, ஒரு கிலோ விலை ரூ.12.50 என்று வந்தது. நம்ம நோக்கம் ஒரு கிலோ உருளைகிழங்கிற்கு ரூ.2.50 என்ற லாபகணக்கில், 10000 கிலோவிற்க்கு ரூ.25000 லாபம் வரும் என்று எதிர்பார்கிறோம்.


எனவே நாம், ஆகஸ்ட் மாதத்தில், நவம்பர் கான்டிராக்டில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.15 என்ற விலைக்கு வியாபாரம் ஆவதாக எடுத்துக்கொள்வோம்.  கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், விலையானது 100கிலே என்ற அளவிற்க்கே கோட் பண்ணப்படும்.  பின்பு ஒரு லாட்டின் அளவானது ஒரு மெட்ரிக் டன் ஆகும்.  எனவே 100 கிலோ உருளைக்கிழங்கின் விலை ரூ.1500 என்ற விலைக்கு வியாபாரம் ஆவதாக எடுத்துக்கொள்ளலாம்.  நாம் ஒரு மெட்ரிக் டன் என்ற அளவில் ஒரு லாட்டை எடுத்து வியாபாரம் செய்தால் அது 1000 கிலோ அளவிற்க்கு இணையானது ஆகும்.  எனவே நாம் பயிரிட்டு அறுவடை கணக்கு போட்டு வைத்திரும்பது 10000 கிலோ ஆகும்.  அது 10 மெட்ரிக் டன்னுக்கு சமம்.  எனவே, நாம் சந்தையில் 10 மெட்ரிக் டன் அளவில் வியாபாரம் செய்யவேண்டும்  அதாவது, ஒரு மெட்ரிக் டன் அளவு கொண்ட 10 லாட்டுகளை வியாபாரத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதன்படி நாம் உருளைக்கிழங்கின் நவம்பர் மாத கான்டிராக்டில் 10 லாட்டுகளை ரூ.1500/- (100 கிலோ) விலையில் விற்பதாக எடுத்துக்கொள்ளலாம். (கையில் பொருட்கள் இல்லாமல், விற்பது என்பது ஷாட் என்று சொல்லப்படும், ஆனால், பின்பு மீண்டும் கட்டாயமாக வாங்கவேண்டும்.)

ஆக 10000 கிலோவிற்கு இணையான 10 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கை ரூ. 1500 (100 கிலோ) விலைக்கு, நவம்பர் மாத கான்டிராக்டில் விற்றுவிட்டோம். 


இந்த செயலை ஆகஸ்ட் மாதமே செய்துவிட்டோம்.  அதன்பிறகு நாம் பயிரிடும் வேலையை செய்வோம். அடுத்து அறுவடை காலம் வரும்போது, அதாவது நவம்பர் மாதத்தில் நாம் அறுவடை செய்த உருளைக்கிழங்கை சந்தையில் விற்கும்போது உருளைக்கிழங்கின் விலை ஒரு கிலோ ரூ.15 என்ற விலையில் இருந்து ரூ.12.50 ஆக குறைந்துவிடுகிறது.  நாமும் அடக்க விலைக்கே விற்றுவிட்டு, ஒரு லாபமும் இல்லாமல் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு போகிறோம்.


கதை அதோடு நிறக்கவில்லை.


போகிற வழியில் நாம் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில ஏற்கெனவே உருளைக்கிழங்கை 10 மெட்ரிக் டன் அளவுக்கு ரூ.1500 (100 கிலோ) என்ற விலைக்கு விற்று இருக்கிறோம் அல்லவா?


நவம்பர் கான்டிராக்ட் முடிவுக்கு வரும்போது, அதன் விலையானது, ஸ்பாட் விலைக்கு செட்டில் செய்யப்படும்.  எனவே உருளைக்கிழங்கின் நவம்பர் கான்டிராக்ட் விலையும் ஸ்பாட் விலையை நோக்கி நகரும்.  அதாவது நாம் விற்ற நவம்பர் கான்டிராக்ட் விலையானது,  ரூ.1500 என்ற விலையில் இருந்து ரூ.1250 என்ற விலைக்கு இறங்கும்.  எனவே நாம் நவம்பர் கான்டிராக்ட்டை ரூ.1250 என்ற விலைக்கு வாங்கு கணக்கை நேர் செய்கிறோம்.  இந்த வியாபாரத்தில் ஒரு லாட்டுக்கு (1000 கிலோ) ரூ.2500 லாபம் கிடைக்கிறது.  மொத்தம் பத்து லாட்டு ஆகும்.  எனவே 10 X 2500 = ரூ.25000 லாபம் கிடைக்கிறது.

ஒரு உற்பத்தியாளராக நமக்கு ஏற்பட்ட இழப்பு, கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், நம் உற்பத்திக்கு இணையான ஷாட் அடிப்பதால், நம் இழப்பு சரிகட்டப்படுகிறது.

இதைத்தான் ஹெட்ஜிங் என்று கூறுகிறோம்.

என்ன இது நாம பண்ற ஹெட்ஜிங்குக்கும், இதற்க்கும் சம்பந்தம் இல்லையே என்று தோன்றுகிறதா?

விவரம் அடுத்த வாரம். 

 

 

கமாடிட்டி A to Z  தொடர் முழுமையாக படிக்க..!

 





 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ