Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிர்லா சன் லைஃப் எம்எஃப் உடன் ஐஎன்ஜி எம்எஃப் திட்டங்கள் இணைப்பு..!

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ரூ. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்தை நிர்வகிக்கும் இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்று பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் (எம்எஃப்).
பிர்லா சன் லைஃப் எம்எஃப், கடந்த ஜூலை மாதத்தில் ஐஎன்ஜி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை கையக்கப்படுத்தியது. இதனை அடுத்து  ஐஎன்ஜி எம்எஃப் -ன், 26 திட்டங்களை பிர்லா சன் லைஃப் எம்எஃப் உடன் இணைக்கும் பணி தொடங்கி இருக்கிறது.
  
ஐஎன்ஜி  எம்எஃப் முதலீட்டாளர்கள் வெளியேற விரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. வெளியேறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 9 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ