Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைகிறது டீசல் விலை!

கடந்த 7 ஆண்டுகளில் முதன்முறையாக டீசல் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டீசல் விற்பனையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வந்தன. இதையடுத்து, ஒவ்வொரு மாதமும், 50 காசுகள் அளவுக்கு விலையை உயர்த்தி, சர்வதேச விலை நிலவரங்களுக்கு இணையாக, டீசலில் சில்லரை விலை கொண்டுவர, முந்தைய மத்திய அரசு திட்டமிட்டது.அதன்படி, 2013 ஜனவரி முதல், டீசல் விலை ஒவ்வொரு மாதமும், 50 காசுகள் உயர்த்தப்பட்டது. 

இதுவரை, 19 முறை விலை உயர்த்தப்பட்டதில், டீசல் விலை 11.81 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில் சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையிலான, டீசலின் விலைக்கும், அதன் சில்லரை விலைக்கும் இடையே, 8 காசுகள் மட்டுமே வேறுபாடு உள்ளதாக கடந்த வாரமே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானிய சுமை குறைந்துள்ளது. 

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலருக்கும் குறைவாக சரிந்துள்ள நிலையில், இந்த விலை வீழ்ச்சி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே நீடிக்கிறது. நேற்றைய நிலவரப்படி பேரல் ஒன்றின் விலை கடந்த 14 மாதங்களில் இல்லாத வகையில் 99.59 டாலராக காணப்பட்டது. 

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், எனவே டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் இலாபம் ஈட்ட தொடங்கும் என்றும், இதன் காரணமாக விலை குறைப்பு அமலாக வாய்ப்பு உள்ளதாகவும் எண்ணெய் நிறுவன உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

எங்களுக்கு கிடைக்கும் இலாபத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க விரும்புகிறோம். டீசல் விலையை ஒழுங்குபடுத்துவது மத்திய அரசுதான் என்பதால், விலை குறைப்பு தொடர்பாக வருகிற 15 ஆம் தேதிவாக்கில் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். 

இதன் காரணமாக இனி மாதந்தோறும், 50 காசுகள் விலை உயர்த்துவது அமலில் இருக்காது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close