Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிவடைந்த பங்குச் சந்தை!

 
 
 
 
இறக்கத்தில் முடிந்த சந்தை.
 
 
இறக்கத்தில் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்திலே முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 207 புள்ளிகள் சரிந்து 27057 என்ற நிலையிலும், நிஃப்டி 58 புள்ளிகள் சரிந்து 8094 என்ற நிலையிலும் வர்த்தகம் முடிவடைந்தது.
ஐடிஎஃப்சி, டிஎல்எஃப், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் விலை உயர்ந்தும், கெயிர்ன் இந்தியா,ஹூரோ மோட்டோ கார்ப், பிபிசிஎல் ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தமானது. 
 
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று உயர்ந்து 60.94 என்ற நிலையில் வர்த்தகமானது. 
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றும்(10.09.2014) இறக்கத்திலே துவங்கியது. காலை 10 மணி அளவில்  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 38 புள்ளிகள் சரிந்து 8113.80 என்ற நிலையிலும், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 127 புள்ளி சரிந்து 27137.63 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.
 
 
 
பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், சிப்லா, லூபின் ஆகிய பங்குகள் ஏற்றத்திலும், இன்ஃபோசிஸ், ஹூரோமோட்டோ கார்ப், ஹிண்டால் கோ ஆகிய பங்குகள் விலை இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆனது 60.86 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ