Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'2030-ல் வேலை நெருக்கடி..?!' - உலக வங்கி எச்சரிக்கை!

'2030-ல் உலகமே வேலை நெருக்கடியைச் சந்திக்க இருக்கிறது?!'
-இது உலக வங்கியின் எச்சரிக்கை!

2030-ம் ஆண்டிற்குள் உலகில் 600 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும்.  இல்லையென்றால் உலகம் வேலை நெருக்கடியை சந்திக்கும் என்று சொல்லி இருக்கிறது உலக வங்கி. அப்படியான சூழல் உருவானால் அதை தடுக்க முடியாது எனவும் ஜி-20 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஜி-20 தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்ந்துவரும் மக்கள் தொகையை சுட்டிக் காட்டி 2030-க்குள் உலக அளவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி சொல்லி இருக்கிறது.

ஜி-20 நாடுகளாக சொல்லப்படுவன அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சைனா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஸியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, சவுத் ஆஃப்ரிக்கா, சவுத் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளே. தற்போதைய நிலவரப்படி இந்த 20 நாடுகளிலும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாக இருக்கிறது. 447 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 120 ரூபாய்க்கு குறைவான சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார்கள் என்ற விவரத்தையும் உலக வங்கி வெளியிட்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் நிலைமையே இக்கட்டாக இருக்கும் போது, இதையும் சரி செய்து இனி வர இருக்கும் வேலை நெருக்கடியையும் சரி செய்ய வேண்டியது ஜி-20 நாடுகளில் தலைவர்களின் கையில்தான் இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ