Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐசிஐசிஐ பேங்க் பங்கு பிரிப்பு.

ஐசிஐசிஐ பேங்க் -  பங்கு பிரிப்புக்கு (ஸ்டாக் பிளிட்)  அந்த வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  ஐசிஐசிஐ பங்கை 1:5 என பிரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு 2 ரூபாய் முக மதிப்பு கொண்ட பங்காக மாற்றப்படுகிறது. இந்த பங்கு பிரிப்பு ஒப்புதலுக்கு பிறகு ஒரு சதவிகிதம் பங்கின் விலை உயர்ந்துள்ளது.
 
இப்படி பங்கு பிரிப்பதால் பங்கின் விலை குறையும். அதேநேரத்தில் பங்குகளின் எண்ணிக்கை உயரும். பங்கு வர்த்தகம் அதிகமாகும். 
ஐசிஐசிஐ வங்கி பங்கு பிரிப்பது இதுவே முதல் முறை. இந்த பங்கு பிரிப்புக்கான ரெக்கார்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP