Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்:ஐசிஐசிஐ

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் விதமாக டெபிட் கார்டுகளை பயனபடுத்தாமல் வெறும் மொபைல் நம்பரை பயனபடுத்தி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த முறைய பயனபடுத்த ஐசிஐசிஐ வங்கி கணக்கும் செல்போன் இணைப்பும் இருந்தால் மட்டுமே போதும்.
 
 
மேலும் பணத்தை அனுப்பும் நபர் மட்டும் வங்கி கணக்கு வைத்திருந்தால் போதும், பணத்தை பெறுபவர் வங்கி கணக்கை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தின்படி ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர் இன்டர்நெட்டில் தனது அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து மற்றவருக்கு அளிக்க இருக்கும் தொகையையும், அவரது மொபைல் நம்பரையும் பதிவு செய்ய வேன்டும். 
 
பணத்தை அனுப்பியவுடன் பணத்தை பெறுபவரின் தொலைபேசி எண்ணுக்கு 6 இலக்க ரகசிய எண்ணும், பணத்தை அனுப்பியவருக்கு 4 இலக்க ரகசிய எண்ணும் அனுப்பப்படும். இந்த இரண்டு எண்ணையும் பணத்தை பெறுபவர் பதிவு செய்தால் ஏடிஎம்-ல் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என ஐசிஐசிஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ