Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரப்பர் - விலைச்சரிவும்,டயர் உற்பத்தி நிறுவனப்பங்குகளின் விலைகளும்

 ரப்பர் விலை சர்வதேசச் சந்தையில் 5 வருட குறைந்தபட்ச   விலையில்  வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . உலகின் ரப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் தாய்லாந்தில் ,இந்த வருடம் ஜனவரி முதல் வாரத்திய விலைக்கும்,நடப்பு செப்டம்பர் முதல் வரத்து விலையோடு ஒப்பிடுகையில் 34% விலை சரிந்துள்ளது .

இதன் காரணமாக ,இந்திய நிறுவனங்கள். ஏப்ரல் முதல் ஜூலை  மாதம் வரையிலான காலத்தில் 1,33,789 டன்கள் என்ற அளவிற்கு இறக்குமதி செய்துள்ளன.

சென்ற வருடம் இதே காலத்தில் 90,580 டன்கள் என்ற அளவிற்கு இறக்குமதி காணப்பட்டது .உற்பத்தி அதிகரிப்பு ,சீனாவின் தேவை குறைந்திருப்பது ,விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது .

 

ஷியாம் சுந்தர்

கேரளாவிலும்  வரும் மாதங்களில் ரப்பர் எடுப்பது அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .நம் நாட்டிலும் ரப்பர் விலை தற்போது 1 கிலோ  ரூபாய் 125  அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது .இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 1 கிலோவானது   ரூபாய் .142 என்ற அளவில் காணப்பட்டது . இந்த சூழ்நிலையில் ,டயர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சென்ற வருடம் முதற்கொண்டே இறக்குமதி அதிக அளவில்  செய்து வந்தன. 

இந்த விலைச்சரிவினால், டயர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தங்களின் மூலப்பொருளின் மீதான  செலவுகள் குறைந்து, லாபம் அதிகரித்தன .
 
NCDEX எக்ஸ்சேஞ்சின்   இந்தியாவின் ரப்பர் விலைப் போக்கு குறித்ததாகும்.  இந்த ஆண்டு துவக்கத்தில் 1 குவிண்டால்( 100 Kg ) ரூபாய் 15000 க்கு மேல் வர்த்தகமானது .
 
இன்றைய பங்கு வர்த்தகத்தில் APOLLO TYRES / MRF / CEAT 
போன்ற நிறுவனங்களின் பங்கு  விலைகள் 2 வருடகாலத்திற்கு ஒப்பிடுகையில் 2-3 மடங்கு அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது      
   

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ