Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி வியாபாரம் 9

   கமாடிட்டி வியாபாரம் 9

தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 ஹெட்ஜிங் சென்ற வார தொடர்ச்சி.....

 
சென்ற வாரம் உருளைக்கிழங்கை எடுத்துக்காட்டாக வைத்து எப்படி ஒரு விவசாயி ஹெட்ஜிங் செய்தார் என்று பார்த்தோம்.
 
இதைப்போன்றே உருளைக் கிழங்கு வியாபாரிகள், உருளைக் கிழங்கை ஏற்றுமதி செய்பவர்கள் மற்றும் இறக்குமதி செய்பவர்கள் தங்கள் செயல்பாட்டை பொருத்து, அது பாதகமான சூழலில் இருக்கலாம் என்று கருதும்போது ஹெட்ஜிங் செய்யலாம்.
 
இதையே இன்னும் ஒரு கோணத்தில் சொன்னால், நீங்கள் தங்க வியாபாரியாக இருந்தால், தற்போது தங்கத்தின் விலை தொடரந்து கணிசமாக இறங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், நீங்கள் ஏற்கெனவே அதிக விலையில் வாங்கி வைத்திருக்கும் தங்க நகைகளை, சந்தையில் தங்கம் விலை குறைய குறைய குறைந்த விலைக்கே விற்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
 
இந்த நஷ்டத்தை சமாளிக்க நீங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் தங்கத்தின் அளவிற்க்கு ஏற்ப, ஃபியூச்சர்ஸ் மார்கெட்டில், லாட் அளவை தேர்வு செய்து, ஷாட் அடித்து வைக்கலாம்.  இதன் மூலம் தங்க வியாபாரியாகிய நீங்கள் தங்கத்தின் விலை இறக்கத்தினால், வரக்கூடிய நஷ்டத்தை ஓரளவிற்க்கு தடுக்கலாம்.
 
 
 
இதையும் ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.
 
உமேஷ் ஒரு நகைக் கடை வைத்திருப்பதாக எடுத்துக்கொள்வோம்.  ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை 10 கிராம் அளவானது ரூ.28900 என்று இருந்தது.  அவர் தங்களுடைய வியாபாரத்திற்காக 10 கிலோ தங்கம் வாங்கி இருப்பதாக எடுத்துக்கொள்வோம்.  ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பரில், தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது.  செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.26900 மாக குறைந்தது.
 
இது உண்மை நிலை.  இந்த நிலையில் உமேஷுக்கு என்னவாகி இருக்கும்.  10 கிராம் தங்கத்திற்க்கு ரூ.2000 நஷ்டம். அப்படி என்றால், ஒரு கிலோவிற்க்கு (ரூ.2000 X 100)  இரண்டு லட்சம் நஷ்டம்.  அப்புறம் 10 கிலோவிற்கு 20 லட்சம் நஷ்டம்.
 
அப்பறம் எப்படி நகை கடைக்காறங்க எல்லாம் எப்படி பிரமாண்ட விளம்பரம் கொடுத்து வியாபாரம் செய்கிறார்கள் என்கிறீர்களா? அது தனிக் கதை.
 
 
 
சரி இப்போது உமேஷ் கதைக்கு வருவோம்.
 
உமேஷிக்கு இப்போது இருபது லட்சம் நஷ்டம் உள்ள நிலை.  அவர் என்ன செய்திருந்தால் இந்த நட்டத்தடை தவிர்த்து இருக்கலாம்.
 
ஹெட்ஜிங்....
ஆம், ஆகஸ்ட் மாதம், உமேஷ் கையில் இருக்கும் 10 கிலோ தங்கத்திற்க்கு எதிராக செப்டம்பர் மாத கான்டிராக்டில், 10 கிலோ அளவிற்க்கு தங்கத்தை 10 கிராம் விலையான ரூ.28900/-ல் ஷாட் பண்ணி இருந்தால், இப்போது, அதே தங்கம் ரூ.26900 என்ற விலையில் கவர் பண்ண முடியும்.  அப்படி செய்திருந்தால், அதன் மூலம் அவருக்கு கையில் வைத்திருக்கும் தங்கத்தின் மூலம் வந்த ரூ.20 லட்சம் நஷ்டத்தை, ஹெட்ஜிங் மூலம், ஈடு செய்திருக்க முடியும்.
பொதுவாக காமாடிட்டி டிரேடில், அந்தந்த துறை சார்தவர்கள் தங்கள் பொருள் சார்ந்த வணிகத்தில், தங்கள் லாபத்தை லாக் செய்வதற்காக ஹெட்ஜிங் உதவுகிறது.
 
 
 
இந்த ஹெட்ஜிங்கை ஸ்பெகுலேட் பண்ணும் நாமும் செய்வோம்.
அதையும் பார்க்கலாம்.
 
சேகர் ஒரு தனியார் கம்பெனியில் மார்கெட்டிங் மேனஜராக இருக்கார்.
சேகருக்க காமாடிட்டி வியாபாரம் செய்ய ஆசை.  ஆனால், அவருக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது. அவர் நண்பர்களிடம் எல்லாம் விசாரித்தார்.  எல்லோரும் சொன்னது என்னவென்றால், நீங்கள் தங்கத்தில் வியாபாரம் செய்யுங்கள் அதில் நஷ்டமே வராது. 
 
சேகருக்கு தைரியம் வந்துவிட்டது.  நஷ்டமே வராத தங்கத்தில் வியாபாரம் செய்ய முடிவு செய்தார்.  ஒரு கமாடிட்டி புரோக்கரிடம் போய், கமாடிட்டி வியாபாரம் செய்யும் கணக்கை துவங்கினார்.  பின் டிரேடிங்கான விவரத்தை கேட்டார்.
சார், நான் தங்கத்தில் டிரேட் பண்ணலாம் இருக்கேன்.
 
பேஷா பண்ணலாமே.
எவ்வளவு சார் பணம் கட்டனும்.
ஒரு 5% பணம் கட்டின போதுங்க. கட்டுங்க...
5% அப்படின்னா எவ்வளவு ரூபா கட்டனும் சார்.
இத பாருங்க இப்ப 10 கிராம் தங்கம் ரூ. 28900 விலையில இருக்கு.  ஒரு கிலோ தங்கம் மதிப்பு 28 லட்சத்து தொள்ளாயிரம்.  இதுல 5% கணக்கு பாரத்தா ஒரு லட்சத்தை நாப்பதாயிரம்தான்.  அது கட்டின போதும், ஒரு கிலோ தங்கம் வாங்கலாம்.
 
சேகருக்கு மனசுல கணக்கு ஓடுது.  ஒரு லட்சம் நாப்பதாயிரம் கட்டினா, ஒரு கிலோ தங்கம் வாங்கலாமா?  அப்ப லாபம் ஒரு லட்சத்து நாப்பதாயிரத்திற்கா அல்லது ஒரு கிலோ தங்கத்திற்கா?  கேட்டிருவோமே.
சார், இப்ப நான் ஒரு லட்சத்தி நாப்பதாயிரம் கட்டினா, லாபம் வந்தா, அப்ப ஒரு லட்சத்து நாப்பதாயிரத்திற்கு கணக்கு போட்டு கொடுப்பீங்களா இல்ல, நீங்க ஒரு கிலோ தங்கத்திறக்கு கணக்குபோட்டு கொடுப்பீங்களா?
என்னங்க இப்படி கேட்டுடீங்க.  முழுசா ஒரு கிலோ தங்கத்திற்க்குதான் லாபம்.  சரி சரி, வெலை ஏறிகிட்டே இருக்க பாருங்க, ஒரு மெகா வாங்கிடலாமா?
 
சரிங்க, இந்தாங்க செக். (போன ஒரு வருஷம் முழுசும் சேர்த்து வைச்ச காசு  எப்படியும் இந்த வருஷம் டபுள் ஆக்கிடனும்)
 
சீக்கிரம் வாங்குங்க சார், பாருங்க அதுக்குள்ள பத்து ரூபாய் ஏறிபோச்சி.
 
 
 
பேஷா வாங்கிடலாம்.  வாங்கியாச்சு பாருங்க.  உங்க அதிஷ்டம் உங்களுக்கு ஆர்டர் போடும்போது, வெலை பத்து ரூபாய் குறைஞ்சிருச்சி.  நீங்க அதிஷ்டகார ஆளுநீங்க.
 
சேகருக்கு மனசெல்லாம் மத்தாப்பூ.  ஒரே நாள்ல ஒரு கிலோ தங்கம் வாங்கியாச்சு.  ஒரு மாசத்தில ஒரு கிராமுக்கு ரூ.100 ஏறினா போதும், ஒரு கிலோவிற்கு ஒரு லட்சம் லாபம் வரும்.   மாசத்து ஒரு லட்சம் வந்தா, வருடத்திற்க்கு 12 லட்சம் வருமானம்.  சேகருக்கு கால் தரையில் இல்லை. கொஞ்சம் மிதப்பது போல் இருந்தது.  ஒரு வேலையும் செய்யாம இருந்தாலே வருஷத்திற்க்கு 12 லட்சம் லாபம்.  பேசமா இப்ப செய்யற வேலையை விட்டிட்டு ஜம்முன்னு லட்சம் லட்சமா இங்கேயே சம்பாதிக்கலாமே....  கனவுகள் மேலும் இனிமையாக இருந்தது.
 
மறுநாள், புரோக்கரிடம் இருந்து போன்.  சேகர், தங்கம் இப்ப ரூ.28900-ல இருந்து ரூ.28800- குறைஞ்சிருச்சி, நீங்க (100 X 100) ரூ.10000- எம்.டி.எம். கட்டணும்.
 
எம்.டி.எம். கட்டனுமா? அப்படின்னா?
அதுவா நீங்க விகடம்.காம்ல காடிட்டி எ-இசட் அப்படின்னு தி.ரா.அருள்ராஜன் எழுத கட்டுரை வருது, அதுல முதல் பகுதியை படிங்க. தெளிவா புரியும்.
சேகரும் ஒரு குழப்பம் லாபம் வரும் சொன்னாங்க, இவர் என்னடான்னா, இன்னும் பணம் கட்ட சொல்றாறே.   சரி சரி என்ன பண்றது.  ஆட்டத்தில இறங்கியாச்சு ஆடித்தானே ஆகவேண்டும்.  அடுத்த மாசம் வாடகை கொடுக்க வைச்சிருந்த பத்தாயிரத்தை எடுத்து எம்.டி.எம். கட்டினார்.
 
தங்கம் ஒரு வாரம் ஏறக்குறைய அதே விலையில் சற்றே மேலும் கீழும் நகர ஆரம்பித்தது. அடுத்த வாரம் விலை இன்னும் ஒரு ரூ.200/- குறைந்து ரூ.28600/- ஆயிடிச்சி.
 
சேகர் வீட்டில போன் அடிக்குது.  சேகர் மனைவி, போனை கொண்டுவந்து கொடுக்கிறார்.  என்னங்க, யாரோ புரோக்கராம், உங்கிட்ட பேசனுமாம்.
 
சேகருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.  போனில் சத்தம் குறைவாக பேசுகிறார். மனைவிக்கு கேட்டுவிடக்கூடாதாம்.
சொல்லுங்க சார்.
 
ஒண்ணுமில்ல சேகர், தங்கம் இன்னும் ரூ.200 குறைஞ்சுடுச்சு, இன்னும் ஒரு இருபதாயிரம் எம்.டி.எம்.  கட்டணும்.  உடனே கட்டிருங்க, இல்லைன்னா, ஹெட் ஆபிசில, பொசிஷன குளோஸ் பண்ணிடுவாங்க.  என்ன வந்திருங்க....
ஐய்ய்யோ பொசிஷனை குளோஸ் பண்ணிடாதீங்க சார். நான் எப்படியாவது பணத்தை கட்டிர்றேன்.
சேகரு, ஆபிசு வேலை பாக்கரவங்க, தெரிசஞ்வங்க எல்லோரிடமும் கொஞ்சம் கொஞ்சம் கைமாத்த பணத்தை வாங்கி ரூ.20000 போய் கட்டிவிட்டார்.
நெஞ்சு கொஞ்சம் பாரமாக இருந்தது.  கடவுளே இந்த முறையாவது தங்க கொஞ்சம் விலை ஏறனும்.  அப்படியே எம்.டி.எம். அப்படின்னா என்னான்னு, காமாடிட்டி எ – இசட் கட்டுரை படிச்சிடனும்,
 
அடுத்த வாரம் தங்கம் விலை சற்றே கூடியது. விலை ரூ.28700 ஆனது. சேகருக்கு ஒரு மன நிம்மதி பிறந்தது.  அவ்வப்போது தொலைபேசி மூலம் விலை கேட்பார். ரூ. 20- 30/- விலை ஏறியிருக்கும்.  எப்படியாவது, வாங்கின வெலை வந்தா கொடுத்து வெளியே வந்திடனும்.  அப்பதான் கைமாத்தா வாங்கன காச திருப்பி கொடுக்க முடியும்.  அடுத்த மாசம் வாடகை கொடுக்க பணம் திரும்பி வரும்.  மனகணக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது.
அன்று அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்தது.  திடீரென்று, புரோக்கரிடம் இருந்து போன்.
சொல்லுங்க சார்.
 
இல்ல, கவர்மென்ட்ல தங்கம் சம்பந்தமா ஏதோ பாலிசி மாத்திட்டாங்களாம்.  அதான் தங்கம் வெலை திடீர்னு குறைஞ்சு போச்சு.  சேகருக்கு மனம் பதை பதைக்க ஆரம்பித்தது.
இப்ப என்ன வெலை சார்.
 
அதுவா ரூ.28200 ங்க.  அதான நீங்க கட்டவேண்டிய எம்.டி.எம். எவ்ளோ சார் ரூ.40000-மா? (கமாடிட்டி எ – இசட் கட்டுரை படிச்சிடார் இல்ல).ஆமாங்க, கரெட்டுங்க.  நீங்க வந்து கொடுக்கிறீங்களா இல்ல, நான் ஆளை அனுப்பட்டுமா?இல்ல சார் நானே வர்ரேன். சேகருக்கு, என்ன பண்ணரத்துனே புரியல.  ரூ.40000 பணத்துக்கு எங்க போறது.   கூட இருந்த நண்பரிடம் புலம்பினார்.  நண்பர் ஒரு யோசனை சொன்னார்.   இதபாரு சேகர், எனக்கு தெரிஞ்ச ஒரு சேட் இருக்கார்.  நீங்க போஸ்ட் டேட் செக் கொடுத்த பணம் கொடுப்பார்.  ஆனா
 
மூணுவட்டி.
 
மூணு வட்டின்னா?
 
என்னா சேகர் இதுகூட தெரியாம நீ கமாடிட்டி வெபாரம் எல்லாம் பண்ற?  மூணு வட்டின்னா, 36% சேகர்.  சேட்டு எந்த செக்யூரிட்டியும் இல்லாம தர்ரார்.  வேணும்னா சொல்லு இல்ல ஆளை விடு.
சேகருக்கு இப்போதைக்கு அடமானம் வைக்க ஒண்ணும் இல்ல.  அப்புறம் வீட்டுக்க தெரிஞ்சாலும் பிரச்சனை.  நண்பர் யோசனைகேட்டு சேட்டிடம் கடன் வாங்கி எம்.டி.எம் கட்டிவிட்டார்.
இப்போது, பயம் தொற்றிக்கொண்டது.  மாசா மாசம் வட்டி கட்ட வேண்டும்.  அதற்கு ஏற்ப, தங்கத்தின் விலையும் ஏற வேண்டும்.  அப்படி ஏறலானா?  போச்சு, எங்கேயும் தலை காட்டமுடியாது.  என்ன பண்றது?
 ஒரே குழப்பம். சேகர் அலுவலகத்தில் கமாட்டி வியாபாரம் செய்து கொண்டு இருக்கும், நரேஷ் என்று இன்னெரு நண்பர் இருக்கிறார்.  அவரிடம் போய் யோசனை கேட்டால் என்ன? சேகர் அவரிடம் போய் பிரச்னையை சொல்கிறார்.
 
இதான் நரேஷ் பிரச்னை, என்ன பண்றதுன்னே தெரியல? மனசும் பாரமா இருக்கு? குழப்பமாவும் இருக்கு?
என்னா சேகர், இதுக்கு போய் இவ்ளோ கவலை பட்ற.  இது சிம்பிள் மேட்டர் சேகர்.   இப்ப என்ன செப்டம்பர் மாசம் கான்டிராக்ட்ல தங்கத்தை வாங்கி வச்சிருக்கியா?
 
ஆமா நரேஷ்.
 
அப்புறம் இன்னா, அக்டோபர் மாசம் கான்டிராக்ட்ல போயி ஒரு மெகாவை ஷாட் அடிச்சிடு.
அப்படி அடிட்சிட்டா?
 
வெலை எவ்வளவு இறங்கினாலும், உனக்கு நஷ்டம் கூடாது, எம்.டி.எம்மும் இனிமே கட்டத்தேவையில்லை.
 
சேகருக்கு மனதில் பால் வார்த்தது போல் இருந்தது. 
 
புரோக்கர் ஆபிசுக்கு போன்போட்டார் சேகர்.
 
சார், அக்டோபர் மாசகான்டிராக்ட்ல ஒரு லாட் மெகா ஷாட் போங்க.
அப்புறம்....  அடுத்த வாரம்.
 
 
முந்தைய பகுதிகளை படிக்க: nanayam.vikatan.com/index.php?cid=151
 
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ