Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்கு இணையதளம்!

 
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்கான ஆலோசனை கூட்டங்களை விரைவில் நடத்த உள்ளதாக மத்திய நகர்புற மேம்பாட்டுதுறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டம் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் பங்குபெறும் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தை அறியும் கூட்டமாக இருக்கும். முதலீட்டாளர்கள், பொதுமக்கள் கருத்தை அறிந்து 
கொண்டு அதற்கேற்ப செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்கு என்று விரைவில் www.smartindia.gov.in   என்கிற இணையதளமும் தொடங்கப்பட உள்ளது. இந்த இணைய தளத்தின் மூலமும் பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்க முடியும். ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தில் 
மத்திய அரசு மேற்பார்வை மற்றும் ஆலோசனை பணிகளை மட்டும்தான் செய்ய உள்ளது. பொதுமக்கள் தனியார் கூட்டு முதலீடுகள் மூலம்தான் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
  
இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் முதலீடு செய்ய ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் சிட்டி அமைந்தால் நாடு முழுவதும் அறிவு வளர்ச்சி மற்றும்  தொழிநுட்ப பயன்பாடுகள் அதிகரிக்கும் என்றும், மின்சாரம், தொடர்பு வசதி, கழிவு மேலாண்மை போன்றவற்றில் நாடு முன்னேற்றமடையும் என்றும், உள்ளூர் அளவினாலான வேலை வாய்ப்புகள், மற்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைவதில் வேகம் இருக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ