Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார் நம்பருக்கு 8.5 லட்சம் செலவழித்த தொழிலதிபர்

கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும் ஆனால் பல லட்சம் செலவாகுமே என்று நினைத்து அந்த எண்ணைத்தை தள்ளிப்போடுவது வழக்கம். ஆனால் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 8.5 லட்சம் செலவழித்து காரை அல்ல! கார் நம்பரை வாங்கியுள்ளார் என்றால் நிச்சயம் ஆச்சர்யம் அளிக்கக்கூடிய விஷயம் தான்!
 
பதிவு மற்றும் உரிமம் வழங்குதல் ஆணையம் CH-01 AZ  வரிசைக்கான ஏலத்தை அறிவித்தது அதில் CH-01 AZ - 0001 என்ற எண்ணை பஞ்சாப்பை சேர்ந்த இன்டர்னேஷனல் ட்ராக்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் LD மிட்டல் வாங்கியுள்ளார். இதற்கு முன் 9.1 லட்ச ரூபாய்க்கு காருக்கான பதிவு எண்ணை வாங்கியதே அதிகபட்சமாக இருந்து வந்தது. இவர் போர்ப்ஸ் இதழின் சிறந்த 100 செழிப்பான இந்தியர்கள் பட்டியலில் 75ம் இடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு அடுத்தபடியாக 3.35 லட்சம் ரூபாய்க்கு CH-01 AZ -0007 என்ற எண் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இந்த நம்பரை தனது மெர்ஸிடஸ் எஸ் வரிசை காருக்காக பதிவு செய்து பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் மிட்டல்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ