Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறு, குறு தொழில் ஊக்குவிக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

இந்தியாவில் அதிக பொருட்களை உற்பத்தி செய்து அதில் மேட் இன் இந்தியா எனத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி  அறிவித்துள்ளார். இதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மூலதன பொருட்கள் துறையில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கு இந்த நிதி பயன்படுத்திக் கொள்ளப்பட இருக்கிறது. 
இந்த திட்டத்துக்காக மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடைய முதல்கட்டமாக சுமார் 930 கோடி ரூபாய் செலவில் குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
முதல் கட்டமாக  டெக்ஸ்டைல், மெஷின் கருவிகள் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை சூரத், பெங்களூர், பஞ்சாபில் ஆகிய இடங்களில் அமைய உள்ளது. இது உருவாக்க இன்னும் இரண்டரை வருடங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு 80 சதவிகித தொகையான 581.22 கோடி ரூபாயை கொடுக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை தொழிற்சாலைகளை பங்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இதே போலதான் இந்த திட்டம் முழுவதும் இப்படிதான் செயல்படும் என கனரக தொழிற்துறை அமைச்சர் ஆனந்த் கீதே தெரிவித்துள்ளார். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ