Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸியோமி ரெட்மி 1 எஸ்... சில வினாடிகளில் விற்று தீர்ந்தது!

சமீப காலமாகவே ஸ்மார்ட்போன் ரசிகர்கள் உச்சரித்து வந்த ஸ்மார்போன் நிறுவனத்தின் பெயர் 'ஸியோமி'. இந்த நிறுவனம் வெளியிட்ட ஸியோமி எம்ஐ3 (xiaomi mi3) ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் மிகக் குறைந்த விலையில் வெளியான ஸியோமி ரெட்மி 1 எஸ் (xiaomi redmi 1s) என்கிற ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
 
இந்த நிறுவனத்தின் மொபைல்கள் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் மார்க்கெட்டில் மட்டுமே கிடைக்கும் என்பதால், போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்கள் வாங்கி வருகிறார்கள். 3,50,000 பதிவுகளுக்கு, இன்று மதியம் இரண்டு மணி அளவில் விற்பனைக்கு வெளியிட்ட ஸ்மார்ட்போனின் எண்ணிக்கை 40,000-தான் என்பதால் சில வினாடிகளில் விற்று தீர்ந்திருக்கிறது.
 
ஸ்மார்ட்போன் விற்பனையில் ஸியோமி நிறுவனம் புதிய புரட்சியை ஏற்படுத்தி வந்தாலும், இதன் பெரும்பாலான ரசிகர்கள் ஸியோமி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கவில்லையே என்கிற கவலையில் இருக்கிறார்கள்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ