Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிவு.

இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் இறக்கத்திலே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில்  சென்செக்ஸ் 314 புள்ளிகள் சரிவடைந்து 27 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமானது. அதாவது சென்செக்ஸ் 26492 என்ற நிலையில் வர்த்தகமானது. அதேபோல நிஃப்டி  சமீபத்தில் 8,100 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. இன்று நிஃப்டியும் 8 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.
 
அதாவது நிஃப்டி 109 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 7932 என்ற நிலையில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது. 
இன்றைய வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டிஸ் லேப், யுனைட்டெட் ஸ்பிரிட், ஐடிசி, சன் பார்மா, இன்ஃபோசிஸ் ஆகிய பங்கின் விலை உயர்ந்து வர்த்தகமானது. டாடா பவர் பங்கு மட்டும் இன்று ஒரே நாளில் 6% அதிகமாகவும், பிபிசிஎல் 4% அதிகமாகவும், லூபின் பஞ்சாப் நேஷ்னல் பேங்க், டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் 3 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து வர்த்தகமானது. 
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 61.08க்கு வர்த்தகமானது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ