Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி!

 

            வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிப்பு வாரியம் 21 திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. நிதித்துறை செயலாளரின் தலைமையில் இந்த வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் அனுமதிக்காக காத்திருந்த 35 திட்டங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
 
 
இதில் பாரத் ஷிப்யார்ட் திட்டமும் அடக்கம். கப்பல் கட்டுவது சார்ந்த தொழிலை மேற்கொள்ள உள்ள இந்த திட்டம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டில் தொடங்கப்பட உள்ளது. 
 
 
 
தவிர தொலைதொடர்பு, வங்கி துறை முதலீடு என பல திட்டங்களும் இதில் அடக்கம். இந்த அனுமதிக்கு ஏற்ப பாதுகாப்பு துறை அனுமதியும் வழங்கிவிடும் என அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ