Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் நஷ்டம் மட்டுமே ரூ16,023 கோடி!


கிங்ஃபிஷர் நிறுவனத்தின் கடன் விவகாரம்தான் சமீபகாலமாக வங்கி வட்டாரத்தின் ஹாட் நியூஸ். இதற்கு காரணம் இந்த நிறுவனம் பல்வேறு வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபாயை கடனாக பெற்றிருக்கிறது. இந்த நிறுவனத்திற்கு கடன் வழங்கிய பஞ்சாப் நேஷனல் பேங்க் (ரூ.800 கோடி), ஐடிபிஐ பேங்க் (ரூ.800 கோடி), பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.650 கோடி), பேங்க் ஆஃப் பரோடா (ரூ.550 கோடி), யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.430 கோடி), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.410 கோடி), யூகோ பேங்க் (ரூ.320 கோடி), கார்ப்பரேஷன் பேங்க் (ரூ.310 கோடி), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (ரூ.150 கோடி), இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (ரூ.140 கோடி), ஃபெடரல் பேங்க் (ரூ.90 கோடி), பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க் (ரூ.60 கோடி) மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் (ரூ.50 கோடி) ஆகிய வங்கிகளை விட எஸ்பிஐ வங்கி அதிகமாக கடன் (ரூ.1,600 கோடி) வழங்கி இருக்கிறது.



மார்ச் 31,2013-ம் தேதி நிலவரப்படி கிங்ஃபிஷர் நிறுவனத்தின் நஷ்டம் மட்டுமே 16,023 கோடி ரூபாய் மற்றும் இதன் சொத்து மதிப்பும் -12,919 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ