Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றுமதியை அதிகரிக்க ஃபியோ வணிக குழு அம்மான் (ஜோர்டான்) பயணம்..!

கடந்த 2013-14 ஆம் ஆண்டில், 1.59 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஜோர்டானுக்கு (Jordon) இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மின்சார கருவிகள், தானியங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, இன்-ஆர்கானிக் ரசாயனங்கள், விலங்கு உணவுகள், பொறியியல் பொருட்கள், பெட்ரோலிய பொருள்கள் உள்ளிட்டவைகளை இந்தியா ஜோர்டானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அதேநேரத்தில் உரங்கள், பாஸ்பேட்கள், பாஸ்பரிக் அமிலம் போன்றவற்றை ஜோர்டானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.



 

நடப்பு 2014-15 ஆம் நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல் - ஜூலை 2014) ஜோர்டானுக்கான இந்திய ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 137% அதிகரித்து 554 மில்லியன் டாலராக இருக்கிறது.

ஜோர்டானில் இந்திய கட்டுமானம் மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது. இது வரைக்கும் இந்தத் துறைகளின் வாய்ப்புகளை பயன்படுத்தாமல் இருக்கிறோம். இந்த வாய்ப்புகளை ஜோர்டான் செல்லும் ஃபியோ குழு பயன்படுத்திக் கொள்ளும் என ஃபியோ (FIEO) அமைப்பின் பிரசிடென்ட் ரபீக் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

ரபீக் அஹ்மத்

ஜோர்டானின் கட்டுமானத் துறையில் தற்போது அதிக எண்ணிக்கையில் உள்கட்டமைப்பு, தொழில் துறை மேம்பாட்டு திட்டங்கள், குடியிருப்பு (75%) மற்றும் வர்த்தக பிரிவில் (25%) நடைபெற்று வருகிறது. மக்கள் தொகை உயர்வு, குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வணிக மேம்பாடு போன்றவற்றால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஜோர்டானின் கட்டுமானத் துறை ஆண்டுக்கு 20% வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெகா ரியல் எஸ்டேட் திட்டங்கள், போக்குவரத்து, நகராட்சி மேம்பாடுகள், ரெட் சீ முதல் டெட் சீ கால்வாய் போன்றவற்றில் உள்கட்டமைப்பு வசதிகள் ஜோர்டானில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பயன்படுத்திக் கொள்ளப்படாமல் இருக்கும் இது  இந்திய தொழில்துறையினருக்கு  சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.  மின் சாதனங்கள், கட்டுமான இயந்திரங்கள் மற்றும் கருவிகள், சானிடரி பொருட்கள் மற்றும் பொருத்துகள் (ஃபிட்டிங்), டைல்ஸ், மார்பிள்கள், கிரானைட்கள், ஸ்பா பொருட்கள் மற்றும் கருவிகள், மின்சார கியர்கள் மற்றும் ஸ்விட்கள், வீடு மற்றும் அலுவலக ஃபர்னிச்சர்கள் போன்றவற்றில் ஜோர்டானில் நல்ல வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதனை ஜோர்டான் செல்லும் இந்தியக் குழு பயன்படுத்திக் கொள்ளும்.

இந்திய தொழில் அதிபர்கள் 60 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை ஃபியோ ஜோர்டானுக்கு அழைத்து செல்கிறது.

அம்மானில் (Amman) 2014, செப்டம்பர் 22 முதல் 25 வரையில் நடக்கும் இன்டர்பில்ட் என்கிற இந்திய வர்த்தக கண்காட்சியில் இந்த வணிகக் குழு கலந்து கொள்கிறது.  இந்தக் கண்காட்சி என்பது ஜோர்டானின் கட்டுமானம், கட்டுமானப் பொருட்கள், உள் வடிவமைப்பு மற்றும் அலங்காரத் துறைக்கான முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

இந்தக் கண்காட்சியில் ஃபியோவின் பங்களிப்பு மூலம் ஜோர்டான் சந்தையில் இந்திய தயாரிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு சார்ந்த சேவைகளுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 21 ஆம் தேதி முன்னணி ஜோர்டன் தொழில் அதிபர்களுடான இந்திய வணிக குழுவின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அம்மான் தொழில் வர்த்தக சபை மற்றும் இந்திய தூதரகம் இணைந்து செய்துள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close