Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் 80 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டம்!

புதிய பென்ஷன் திட்டமான ஸ்வலம்பன் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் சுமார் 80 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி  அண்ட் டெவலப்மென்ட் அத்தரிட்டியின் தலைவர் ஆர் வி வர்மா தெரிவித்துள்ளார்.  தற்போது இந்த திட்டத்தின் கீழ் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஜன் தன் யோசனா திட்டத்தின் உதவியுடன் இதை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
அரசு வேலையில் இல்லாதவர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு இந்த பென்ஷன் திட்டம் உதவியாக இருக்கும். இவர்களுக்கு எதிர்காலத்தில் குறைந்தபட்சம் பென்ஷன் கிடைப்பதற்காக சூழலாக இருக்கும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ