Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அலிபாபாவின் ஐபிஓ சாதனை !


சீனாவின் முன்னணி இ-காமார்ஸ் நிறுவனமான அலிபாபா நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 1.30 லட்சம் கோடி ரூபாயை திரட்டியுள்ளது. தற்போதைய நிலையில் அலிபாபா நிறுவனம்தான் அமெரிக்க பங்குச்சந்தையில் அதிக தொகையை திரட்டி இருக்கிறது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் விசா நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையில் திரட்டிய 1.18 லட்சம் கோடி ரூபாய்தான் அதிகமானதாக இருந்தது.

1.30 லட்சம் கோடி ரூபாயை திரட்டியுள்ளதால் உலக அளவில் புதிய பங்கின் மூலம் அதிக தொகையை திரட்டி இருக்கும் நிறுவனங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. 15 வருடங்களுக்கு முன்பு ஜாக் மா என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அலிபாபா நிறுவனம் அதிவேக வளர்ச்சியால் உலக நாடுகளை கவனிக்க வைத்திருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close