Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A-Z தொடர் 10

   கமாடிட்டி வியாபாரம் 10

தி.ரா.அருள்ராஜன் 

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 ஹெட்ஜிங் சென்ற வார தொடர்ச்சி..... நம்முடைய ஹெட்சிங்....

 
சேகர் கோல்ட் மெகாவில் ஒரு லாட் எடுத்துவிட்டு விலை இறங்கியதால், அவர் அடுத்த மாத கான்டிராக்டில் ஒரு  ஷாட் அடித்து ஹெட்ஜ் செய்துவிட்டார் என்று சென்ற வாரம் பார்த்தோம் அல்லவா! இனி என்ன ஆகிறது என்று பார்ப்போம்.
 
சேகர் செப்டம்பர் மாதம் லாங் (வாங்கியிருக்கிறார்) விலை ரூ.28900/-
பின் அக்டோபர் மாதம் ஷாட் (விற்று இருக்கிறார்) விலை ரூ.28200/-
 
பிறகு விலையானது ஒரு நாள் ஏற்றம் ஒரு நாள் இறக்கம் என்று மாறி மாறி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
 
  சேகருக்கு ஒரு கவலையும் இல்லை.  அதான் பொஷிஷனை ஹெட் பண்ணிட்டேனே, கழுத, இந்த விலை மேலே போனா இன்னா, கீழே போனா இன்னா.  என்னை ஒரு பய இனி எம்.டி.எம் கேட்க முடியாது.
 
நல்ல காலம் நமக்கு ஹெட்ஜிங் பத்தி நரேஷ் சொல்லி கொடுத்தார்.  மனம் கொஞ்சம் இலேசானது.
சில நாட்கள் நிம்மதியாக இருந்தது.  சேகரும் அப்பாடா என்று இருந்தது.
அலுவலத்தில் நரேஷிடம் மீண்டும் பேச வாய்ப்பு கிடைத்தது.  நரேஷ், சேகரிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.
என்ன சேகர், கமாடிட்டி டிரேடிங் எப்படி போகிறது?
அன்னக்கி ஹெட்ஜிங் போட்டிது அப்படியேதான் இருக்கு நரேஷ்.
அப்படியா அப்புறம் விலை ஏறிச்சா இல்ல இறங்கிச்சான்னு பார்தியா?
இல்லையே....
பார்க்கனும் சேகர்.  சரி இப்ப என்ன விலையில கோல்ட் இருக்கு.  சரி சரி நானே பார்த்து சொல்றேன்.  ம்... ம்... ம்..., மொமைலை தட்டி இப்ப சேகர், 27900/-த்தல இருக்கு.
என்னா.............து, 27900/-மா?  இன்னும் இறங்கி போச்சா?
இரு சேகர், ஏன் பதட்டபடறே.  பொறுமையா இரு.  இப்ப விலை இறங்கி இருக்கு இல்லே.  இதனால, உன்னோட அக்டோபர் கான்டிராக்ட் வித்த வெலை 28200/-, இப்ப 27900/- வெலை இருக்கு.  அப்ப ஷாட் அடிச்சதில ரூ.300/- லாபம்.  ஒரு மெகாவுக்கு (300 x 100) ரூ.30,000/-.  மொதல்ல லாபத்தை வெளியே எடுப்போம்.
 
 
சேகர் முகம் பிரகாசமானது.  அப்ப எனக்கு ரூ.30000/- லாபமா?
லாபம் மாதிரிதான்...
சேகர் முகம் சுருங்கியது.  அப்படின்னா?
லாபம்தான் சேகர்.  ஆனால், செப்டம்பர்மாதம் லாங் போனமே, அதில் நஷ்டம் இருக்கும்.  அதனால என்ன கவலைப்படாதே.  விலை மேலே ஏறினா, அதில நஷ்டம் கொறையும், அப்புறம் லாபம்கூட வரும்.
இப்ப என்ன சொல்ற நரேஷ், நான் இப்ப ஹெட்ஜை எடுக்கிறதா, இல்லையா? 
அது உன் இஷ்டம் சேகர்.  எனக்கு தெரிஞ்சத சொல்லிகொடுத்தேன் அவ்வளவுதான்.
சேகருக்கு ஒரே குழப்பம். என்னடா இது,  ஹெட்ஜிங்கல இழுத்துவிட்டுட்டு இப்ப நீயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்றாறே.  இப்ப ஹெட்ஜ எடுக்கலாமா? வேணமா? 
குழப்பம் குழப்பம் குழப்பமோ குழப்பம்.
இப்போது விலை இன்னும் குறைந்து 27800க்கு வருகிறது. அக்டோபர் கான்டிராக்ட்டில் 28200 ஷாட் அடித்தது இப்போது லாபத்தை காட்டிக்கொண்டு இருக்கிறது.  அதாவது 10கிராமுக்கு ரூ.400/-.  அப்படி ஒரு கிலோவுக்கு, இப்பதான் கணக்குபோடறதில எக்ஸ்பெர்ட் ஆயிட்டமில்ல.  ஒரு கிலோவுக்கு ரூ.40000/- லாபம் காட்டுது.  சேகருக்கு ஒருபக்கம் ரூ.40000/- லாபம் சந்தோஷத்தை கொடுக்கிறது.  அடுத்த பக்கம், ஏற்கெனவே 28900ல் வாங்கிய செப்டம்பர் கான்டிராக்ட் 10 கிராமுக்கு ரூ.1100/- நட்டத்தடை காட்டுகிது.  அப்படினா மொத்த நஷ்டம் ரூ.1,10,000/-.  
 
 
சேகருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  அதாவது, லாபத்தை வெளியே எடுப்பதா, இல்லை, இன்னும் கொஞ்சம் நாட்கள் இப்படியே விட்டுவிடலாமா?
எதுக்கும் நரேஷ்கிட்ட ஒரு வார்த்தை கேட்போம் என்கிறது மனது.  சரி முழுக்க நனைந்தபின் முக்காடு எதுக்கு.  ஆவரது ஆவட்டும், கேட்டுதான் பார்ப்பேமே.  கால்கள் நரேஷ் டேபிளை நோக்கி நகர்ந்தது.
நரேஷ்...
 
 
பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்த நரேஷ் கண்ணை பைலில் இருந்து நகர்த்தாமல், சொல்லு சேகர் என்றார்.
இல்ல... சேகர் வார்த்தைகள் தயங்கி தயங்கி வந்தன.  இந்த கோல்ட் ஹெட்ஜ், ஷாட்ல லாபம் அதை எடுத்திடலாமா? அதை கேட்கலாம்னுதான்.... சேகர் வார்த்தைகளை மென்னு விழுங்கினார்.
அதான் அப்பவே சொன்னேனே சேகர், பட்டுனு லாபத்தை எடுத்திடுங்க, வெலை மேல போச்சுன்னா, இந்த லாபம் கையைவிடு போய்டும். அப்புறமா வெலை மேல ஏறும் போது, லாங் போனதை வெளிய வந்திடலாம்.  பைலில் இருந்து கண்ணை எடுக்காமலே நரேஷ் பதில் சொன்னார்.
இதற்கு மேல் சேகரால் அங்கு நிற்கமுடியவில்லை.  
தேங்ஸ் நரேஷ் -  மீண்டும் தன் சீட்டுக்கே வந்தார்.  வேலையில் கவனம் ஓடவில்லை.  முகத்தில் முத்துமுத்தாக உதிர்ந்த வியர்வையை கைகுட்டையால் துடைத்தார்.  தலையை ஒரு முறை ஆட்டி ஒரு முடிவுக்கு வந்தவராக, போனைத்தை எடுத்து புரோக்கரை அழைத்தார்.
சார், நான் சேகர் பேசறேன்...... 
ஆமா சார், அந்த அக்டோபர் கான்டிராக்ட் ஷாட் இருக்குல, அதை குளோஸ் பண்ணிடுங்க.  
என்ன?   விலை இன்னும் ரூ.100/- குறைஞ்சுடிச்சா? 27600/-ஆ...  அப்ப ஷாட்ல ரூ.50000/- லாபமா. நல்லது குளோஸ் பண்ணிடுங்க.
சேகருக்கு சட்டையெல்லாம் தெப்பாலாக நனைந்து இருந்தது.  மெல்ல நீண்ட மூச்சை இழுத்துவிட்டார்.  பின்பு மெல்ல மெல்ல வேலையில் கவனத்தை செலுத்தினார்.
அடுத்த நாள் சேகர் ஆபிசுக்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தார்.  ஒரு மணிநேரம்கூட ஆயிருக்காது, புரோக்கர் ஆபிசில் இருந்து போன்.
 
மிஸ்டர் சேகர், கோல்ட் வெலை இன்னும் கொறைஞ்சு போச்சு,  வெலை 27400.  இப்ப ஹெட்ஜ்ஐ எடுத்திட்டீங்களா அதனால, இப்ப நஷ்டம் இன்னும்  கூடி போச்சு.  அதனால, எம்.டி.எம். கட்டினா பொஷிஷனை வைச்சுக்கலாம்.  இல்லனா குளோஸ் பண்ணிடுவோம்.  என்ன சொல்றீங்க?
 
சார்... சார்... குளோஸ்பண்ணிடாதீங்க சார்.  எப்படியும் விலை ஏறிடும்.  அப்ப கொஞ்சம் நஷ்டம் குறையும் அப்ப வித்திடலாம் சார்.
சாரி சார், ஹெட்ஆபிசில இதுக்கு ஒத்துக்கமாட்டாங்க...  சாயந்தரம் 6 மணிக்குள்ள செக் கொடுத்திடுங்க. அப்படி வரலேன்னா,  பொஷிஷனை குளோஸ் பண்ணிதான் ஆகனும்.  போனை பொட்டென்று வைத்தார்.
சேகருக்கு தலை சுற்றியது.   கடவுளே 6 மணிக்குள்ள எப்படியாவது வெலையை ஏத்திவிடு.
கையில் இருக்கும் அனைத்தையும் இழந்ததுபோல் உணர்ந்தார்.
மணி 6 நோக்கி நகர நகர அவர் மனது லப்டப் அடிக்க ஆரம்பித்தது.
இது மனிதருக்கு சோதனையான நேரம்.  சேகரால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.  நெற்றியல் சூடு பரவ ஆரம்பித்தது.  உடலில் ஒரு நடுக்கம் ஆரம்பித்தது.  உடலில் வியர்வை வர ஆரம்பித்தது.
 
 
சேகர் ஒரு அரைமயக்க நிலையை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.
அலுவலக கடிகாரம் டண் டண் என்று அடித்து மணி 6 ஆகியதை உணர்த்தியது.  
புரோக்கர் என்னுடைய பொஷிஷனை குளோஸ் பண்ணி இருப்பார இல்லை இன்னும் அப்படியே இருக்குமா?   எல்லா பணத்தை எம்.டி.எம்-ஆக கட்டிமுடிச்சாச்சி.  இனி கையில் பணம் ஒன்றும் இல்லை.
சரி ஆனது ஆகட்டும், புரோக்கர் ஆபிசுக்கு போன் பண்ணி கேட்கலாம். மனதை சமாதானப்படுத்தி, போனை எடுத்தார், நெம்பரை அமுக்கியபோது, கைவிரல்கள் நடுங்க ஆரம்பித்தது.  ஒருவாறு நெம்பரை போட்டு முடித்துவிட்டு,  காதில் வைத்தார்....
 
சார் நான் சேகர் பேசுகிறேன்....    என்னோட காமாட்டிட்டி பொஷிஷன்...
அதுவா சேகர், ஒரு நிமிஷம்....,  உங்க கோல்ட்பொஷிஷன் கொஞ்சம் ஏறி இருக்குங்க.   இப்ப நோ லாஸ், நோ பிராஃபிட் பொஷிஷன் இருக்கீங்க.
எல்லாத்தையும் குளோஸ் பண்ணிடலாமா, சேகர்.
சேகருக்கு மனதில் பட்டாம்பூச்சி அடித்தது.  அப்பாடா.....  இனிமே கையில் இருந்து எந்த காசும் போட வேண்டும்.  ஆனா போட்ட காசு வரணும்னா, இன்னும் கொஞ்சம் விலை ஏறனும்.  என்ன பண்ணலாம்?  சரி புரோக்கரையை கேட்டு பார்ப்போம்.
 
சார் கோல்ட் இன்னும் ஏறுமா?  இந்த பொஷிஷனை இன்னும் வச்சுக்கலாமா?
சேகர் சார், இன்னும் ஏறுமான்னு தெரியலை, இவ்ளோ தூரம் ஏறினதே பெரிசு சார்.  இப்பதான் நோ லாஸ் நோ பிராபிட்ல இருக்கீங்க இல்ல, வித்துட்டு வெளிய வந்துடுங்களேன்.
விக்கலாம் அப்புறம் ஏறிடிச்சினா?
ஏறிடிச்சினா நல்லதுதான் சார், இப்ப இறங்கிறமாதிரி இல்ல இருக்கு.  ஒருவேளை நல்லா இறங்கிடிச்சினா?
என்ன பண்ணலாம்?
நீங்களே முடிவெடுங்க.....
அப்ப திரும்ப அடுத்த மாசத்து கான்டிராக்ட்ல ஹெட்ஜ் போடுங்க சார். 
 
(தொடரும்) 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ