Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லட்கேஜ் தவறியதால், ஜி-20 மாநாட்டின் வரவேற்பை தவறவிட்ட இந்திய பெண் அமைச்சர்

இந்தியா உள்ளிட்ட 20வது நாடுகள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு கெய்ர்ன்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதற்கான வரவேற்பில் கலந்து கொள்ள அனைத்து நாடுகளின் வணிக அமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
இந்தியாவின் வணிகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா வழியாக் கெய்ர்ன்ஸ் வந்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவில் இருந்து கெய்ர்ன்ஸ் செல்வதற்கான விமானத்திற்கு மாறும் போது ஏர் இந்தியா விமானத்தில் கொண்டுவரப்பட்ட அவரது லக்கேஜ்கள் காணாமல் போய் விட்டன. அதனால் கெய்ர்ன்ஸில் இறங்கிய அவரால் அவரது ஆடை உட்பட அனைத்து லட்கேஜ்களையும் தவறவிட்டதாகவும், இதுவரை எந்த தகவலும் இல்லை, நிச்சயம் என்னால் கெய்ர்ன்ஸில் ஒரு புடவை வாங்குவது கடினம்! என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இந்த காரணத்தால் இவர் வரவேற்பு நிகழ்ச்சியை தவறவிட்டுள்ளார்.
 
ஏர் இந்தியா அதிகாரிகளும், இந்திய நிர்வாகமும் அவரது லட்கேஜை தேடி கண்டுபிடித்து, கெய்ர்ன்ஸ் அனுப்பும் பணியில் உள்ளன. ஒருவேளை இந்த லட்கேஜ் கிடைக்காமல் இந்தக் கூட்டத்தை இவர் தவறவிட்டால் இவர் தொடர்ச்சியாக கலந்து கொள்ளாத மூன்றாவ்து கூட்டம் இதுவாக அமையும்,. ஏற்கெனவே ஜன்தன் திட்ட துவக்கம், நாடாளுமன்ற அலுவல் காரணமாக இரு வெளிநாட்டு கூட்டங்களை தவறவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ