Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிரந்தர பி.எஃப். கணக்கு எண் அக்.16-ல் அறிமுகம்!


அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி நிரந்தர பி.எஃப் கணக்கு எண் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் தொழிலலாளர் அடையாள எண்ணுக்கான தனியான இணைய போர்டலை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இதையும் அக்.16-ம் தேதி வெளீயிட இருப்பதாக தெரிவித்துள்ளது.
 


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சந்தாதாரர்களுக்கு பிஎஃப் கணக்கு எண் வழங்கியுள்ளது. ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வேறெரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவரது பி.எஃப் கணக்கு எண்ணும் மாற்றப்படும். இதனால் அந்த தொழிலாளிக்கு நடைமுறை சிக்கல் உருவாகும். அதேபோல பி.எஃப் அலுவலகத்திலும் பணி சுமை அதிகரிக்கும். வணிக ஒழுங்குமுறை, வெளிப்படைத்தன்மை போன்ற எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பிஎஃப் சந்தாதாரர்கள் அனைவருக்கும் நிரந்தர கணக்கு எண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களையும் நம் நாட்டின் பிரதமர் மோடி ஆரம்பித்து வைப்பார் எனவும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ