Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர்ச்சியான வங்கி விடுமுறைகள்! மக்கள் எப்படி சமாளிப்பது!

இந்த மாத இறுதி மற்றும் அக்டோபர் முதல் வாரத்தில் வங்கிகளுக்கு வரிசையாக விடுமுறை நாட்கள் வருவது மக்களால் தொடர்ந்து சில நாட்களுக்கு வங்கியை பயனபடுத்த முடியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது. இது வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் துவங்குகிறது. செப்டம்பர் 30 காலாண்டு முடிவு நாள் என்பதால் வங்கி பரிவர்த்தனைகளை வங்கி அனுமதிக்காது. மறுநாள் அக்டோபர் 1ம் தேதியும் சில வங்கிகள் காலாண்டு முடிவு நிறைவு பெறாததால் விடுமுறை எனவும் அறிவிக்கும், 
 
அக்டோபர் 2ம் தேதி காந்திஜெயந்தி விடுமுறை, அக்டோபர் 3ம் தேதி தசரா பண்டிகை விடுமுறை, அக்டோபர் 4ம் தேதி சனிக்கிழமை என்பதால் அரைநாள் தான் வங்கி இருக்கும்.  ஞாயிற்றுகிழமை பொது விடுமுறை மற்றும் அக்டோபர் 6ம் தேதி பக்ரித் என்பதால் விடுமுறை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழலை வங்கிகள் எப்படி சமாளிக்கப்போகின்றன என்று சில வங்கிகளிடம் கேட்டோம்!
 
இது குறித்து பதிலளித்த ஸ்டேட் பேங்க் வங்கி அதிகாரிகள் '' ஸ்டேட் பேங்க் அக்டோபர் 1, 4(அரைநாள்) மற்றும் அக்டோபர் 6ம் தேதிகளில் வேலை செய்யும் என்று கூறியுள்ளனர். இதே போன்று கனரா வங்கி அக்டோபர் 1 மற்றும் 4ம் தேதிகளில் வேலை செய்யும் என்றும் கூறியுள்ளது. தனியார் வங்கியான ஆக்ஸிஸ் அக்டோபர் 1,4 மற்றும் 6ம் தேதிகளில் வேலை செய்யும் என்று கூறியுள்ளது.
 
 
இப்படி வங்கிகள் தங்களுக்குள் விடுமுறை தினங்களை மாற்றியுள்ளதை மக்கள் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தங்களது வங்கி பரிவர்த்தனைகளை அமைத்து கொள்ளுமாறு வங்கிகள் வாடிக்கையாளரை கேட்டுக்கொண்டுள்ளன.
 
மக்கள் கவனத்திற்கு:
 
இந்த வருடம் தொடர்ச்சியாக வங்கி விடுமுறைகள் வந்துள்ளதால் உங்கள் வங்கி பரிவர்த்தனைகளை முன்கூட்டியே கையாளுங்கள். இல்லை என்னிடம் ஏடிஎம் உள்ளது. நான் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்து கொள்வேன் என்றால் வங்கி விடுமுறை நாட்களில் பணம் நிரப்புவது சிரமம், மேலும் சம்பள நாள் என்பதால் அனைவரும் முதல் தேதியிலேயே பணத்தை எடுத்துவிடுவார்கள் என்பதால் உங்கள் ஏடிஎம் மையத்தில் பணம் தீர்ந்துவிட்டாலும் கஷ்டம் தான் அதனால் கவனமாக செயல்பட்டு வங்கி பரிவர்த்தனைகளை கையாளுங்கள்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ