Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாஸ்போர்ட் சேவையில் அஞ்சல்துறை.

          நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் வழி பாஸ்போர்ட் சேவை தொடங்க உள்ளது மத்திய அரசு. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட பிறகு தகவல் பரிமாற்றத்திலும், பண பரிமாற்றதிலும் பெருமளவு மாற்றங்கள் வந்துவிட்டது. இதனால் தபால் நிலையங்களுக்கு மக்கள் செல்வது குறைந்து விட்டது. இதனால் இந்தியாவின் மிகபெரிய சேவை நிறுவனமான இந்திய அஞ்சல் துறை தனது ஊழியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டுமெனில் புதிய புதிய வாய்ப்புகளை தேட வேண்டியிருக்கிறது.
 
 
     குறிப்பாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்களும், சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் தனது வருமானத்தை பெருக்கினால்தான் தொடர்ந்து இயங்க முடியும் என்கிற நிலை அஞ்சல்துறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அஞ்சல் அலுவலகங்களில் அரசின் பல்வேறு சேவைகள் தவிர சின்ன ஃப்ரிட்ஜ் முதற்கொண்டு சோலார் விளக்குகள்வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
 
 
இது தவிர அரசு தேர்வுதுறை விண்ணப்பங்கள், மின் கட்டண வசூல், ரயில் மற்றும் விமான பயண முன்பதிவு என இதர சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. 
 
 
மேலும் இணையம் வழி மணி ஆர்டர், செல்போன் மூலம் மணி ஆர்டர் என்கிற அளவில் தொழில்நுட்ப யுகத்திலும் தாக்குபிடித்து கொண்டிருக்கிறது. டெலகிராப் போன்ற  பழைய தொழில்நுட்பங்களை நிறுத்தும் அதேவேளையில் கம்யூட்டர் உள்ள அஞ்சல் நிலையங்களில்  இ-போஸ்ட் என்கிற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.  
 
 
        இந்த நிலையில் புதிதாக பாஸ்போர்ட் சேவை பிரிவையும் தொடங்க உள்ளது இந்திய அஞ்சல்துறை. 29 தலைமை தபால் நிலையங்கள் உள்பட, 36 அஞ்சல் நிலையங்களில் இந்த சேவை தொடங்கப்பட உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. 
 
 
  அஞ்சல் நிலையத்தில் ரூ.10 கொடுத்து விண்ணப்பத்தை வாங்கி அதை பூர்த்தி செய்து கொடுத்தால் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யப்படும். இதற்கான கட்டணம் ரூ 100. முன்பதிவு செய்த பிறகு பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அரசுக்கு கட்ட வேண்டிய கட்டணத்தை வங்கியில் செலுத்த செலான் கொடுக்கப்படும். இந்த செலானில் அடிப்படையில் வங்கியில் பணம் செலுத்திவிட்டு, அந்த செலானை தபால் அலுவலகத்தில் காட்டினால் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேர்காணல் செல்வதற்கான நாள் உறுதி செய்யப்படும். இதன் மூலம் தேவையற்ற அலைச்சல்கள் குறையும் என்கிறது தபால்துறை.
 
பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்களுக்கான அலைச்சலை குறைக்கும் அஞ்சல் துறையில் இந்த சேவை நல்ல பயன்தரும் என்று நம்பலாம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ