Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசியாவின் சக்திவாய்ந்த பெண்கள்!

சமீபத்தில் ஃபார்ச்சூன் பத்திரிக்கை ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் சக்தி வாய்ந்த 25 பெண்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஆசிய அளவிலான இந்த 25 பெண்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எட்டு பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். 


இதில் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சாந்தா கோச்சர் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அருந்ததி பட்டாச்சார்யா நான்காவது இடத்தையும், ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் நிஷி வாசுதேவா ஐந்தாவது இடத்தையும் மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் ஷிக்கா சர்மா பத்தாவது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து பையோகான் நிறுவனததின் கிரண் மசூம்தார் ஷா 19-வது இடத்தையும், தேசிய பங்கு வர்த்தக நிறுவனத்தின் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன் 22-வது இடத்தையும், ஹெச்எஸ்பிசி நைனா லால் கித்வாய் 23-வது இடத்தையும், டாஃபே நிறுவனத்தின் சி இஓ மல்லிகா ஸ்ரீனிவாசன் 25-வது இடத்தையும்  பெற்றிருக்கிறார்கள். 
அதே நிறுவனம் உலகின் சக்தி வாய்ந்த பிஸினஸ் பெண்மணி பட்டியலையும் வெளியிட்டது. இந்த பட்டியலில் பெப்ஸிகோ நிறுவனத்தின் சிஇஓ இந்திரா நூயி மூன்றாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளார். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close