Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறைவாக சம்பளம் வாங்கும் சிஇஓகள்!

 
இந்திய நிறுவனங்களில் மிகக் குறைவாக சம்பளம் வாங்கும் சிஇஓ குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பிஎஸ்இ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பல துறைகளைச் சேர்ந்த 100 முக்கிய நிறுவனங்களின் ஆண்டு அறிக்கை அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
 
   
 
    இதில் கும்மின்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த. ஜே. தலூலிகர் ஆண்டுக்கு ரூ.24 லட்சத்தை மட்டுமே சம்பளமாகப் பெறுகிறாராம். பவர் ஜெனரேட்டர் உற்பத்தி நிறுவனமான கும்மின்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஆயுள்கால ஊழியர் என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் தலூலிகர் குழும ஊழியர்களுக்கு என்ன ஊதிய உயர்வோ அதுதான் எனக்கும் என்கிறார். இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ 3,899 கோடி. 
 
 
இதற்கடுத்து ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உமேஷ் ரெவாங்கர். இவரது ஆண்டு ஊதியமாக ரூ.48 லட்சம் பெறுகிறார். 1987 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். 
 
 
வங்கித் துறையில் ஃபெடரல் வங்கியின் தலைவர் ஷுயாம் சீனிவாசன் ரூ.84 லட்சமும், இன்டஸ்இன்ட் வங்கியின் சேர்மன் ரமேஷ் 3.1 கோடியும் ஊதியமாக பெறுகிறார்கள். 
குறைவாக சம்பளம் பெறும் பட்டியலில் எம் அண்ட் எம் ஃபைனான்ஸ், ஏபிபி இந்தியா நிறுவனங்களின் சிஇஓக்கள் 2 கோடிவரை சம்பளம் பெறுகிறார்கள்.  
 
இந்த பட்டியலில் அதிகமாக சம்பளம் பெறுவது சிப்லா நிறுவனத்தின் சுபானு சக்சேனா ரூ.21.6 கோடி, இன்ஃபோசிஸ் விஷால் ஷிகா ரூ.30 கோடி சம்பளம் பெறுகிறார்கள் என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ