Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி அரசை புகழ்ந்த ப.சிதம்பரம்!

 தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது உரையில் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். 2013-2014ல் 4.7ஆக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி தற்போது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

 
2008ல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார சறுக்கலுக்கு முன் 9 சதவிகிதமாக இருந்தது இந்தியாவின் ஜிடிபி. தற்போது வளர்ச்சி பாதையில் உள்ள  மோடியின் அரசு சேமிப்புகளிலும், முதலீடுகளிலும் தொடர்ந்து தற்போது உள்ள வளர்ச்சியை தொடர்ந்தால் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் 8 சதவிகித ஜிடிபியை இந்தியா எட்டும் என்றும், இதனால் 10 மில்லியன் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
 
அதுமட்டுமின்றி திட்ட ஆணையத்தை கலைப்பது என்ற முடிவை எடுத்திருக்கும் மோடியின் அரசை பாராட்டியுள்ளார்.கடந்த ஆட்சியில் நிதிய்மைச்சராக இருந்த ப.சிதம்பரம் தற்போது எதிர்கட்சி வரிசையில் நின்று கொண்டு மோடியின் அரசை புகழ்வது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ