Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம்!

 

   பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் அரசு பயணமாக நாளை அமெரிக்க செல்கிறார். இந்த பயணத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமா மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தொழிலதிபர்கள் முதலீட்டாளர்கள் என பலரையும் சந்திக்க இருக்கிறார். பிரதமரின் இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது.
 
2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனக்கலவரத்திற்கு பிறகு மோடி அமெரிக்க வருவதற்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.  கடந்த வருடங்களில் மோடியை அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒரு நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுத்தபோதும், மோடியால் செல்ல முடியவில்லை. அமெரிக்கா அவருக்கான விசாவை  மறுத்துவிட்டது. இந்த நிலையில் மோடி இந்திய பிரதமரான பிறகு அவருக்கு நேரடியகவே அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. முன்பு குஜராத் என்கிற ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தார் என்பதால் அப்போது விசா மறுக்கப்பட்டது. ஆனால் இன்று இந்திய துணைக்கண்டத்தின் பிரதமர் என்கிற வகையில் மோடிக்கான தடையை விலக்கிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த பயணத்தின் மூலம் அமெரிக்க& இந்திய இடையே வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும் என்றும், இந்த பயணம் இந்திய பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் தொழில்துறையினர். மோடியின் அமெரிக்க பயணத்தை ஒட்டி அங்கு வசிக்கும் இந்தியர்கள் பெரும் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறார்களாம். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் இந்தியர்களும், கனடா உள்ளிட்ட அண்டை நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க காத்திருக்கிறார்கள்.  
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ