Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விழாக் காலம் - விமான நிறுவனங்களின் அதிரடி சலுகைள்!


விழாக் காலம் ஆரம்பித்துவிட்டதால் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சலுகைகளை வாரி வழங்க ஆரம்பித்துவிட்டன.
 
ஏர் ஏசியா நிறுவனமும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும்  ஆஃபர்களை அறிவித்திருக்கின்றன.

ஏர் ஏசியா நிறுவனம் பெங்களூரிலிருந்து கொச்சி, கோவா மற்றும் சென்னை வழித் தடங்களுக்கு 690 ரூபாய் டிக்கெட் கட்டண சலுகைகளையும், ஜெய்பூரிலிருந்து சண்டிகருக்கு 2,390 ரூபாய் கட்டணச் சலுகைகளையும் அறிவித்துள்ளது.

 


தவிர, சென்னை, கொச்சி, திருச்சி, கொல்கத்தா மற்றும் பெங்களூருவிலிருந்து மலேசியா கோலாலம்பூருக்கு 4,999 ரூபாய் கட்டணச் சலுகையையும், சென்னையிலிருந்து பேங்காங் செல்ல 4,500 ரூபாய் சலுகை கட்டணத்தையும் அறிவித்திருக்கிறது.
 


ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கொச்சியிலிருந்து பெங்களுக்கு பயணம் செய்ய ரூ.908, கொச்சியிலிருந்து பெங்களூருக்கு பயணம் செய்ய ரூ.1,162 ஆகிய டிக்கெட் கட்டண சலுகையையும், பெங்களூரு - சென்னை (ரூ1,162), சென்னை-பெங்களூரு (ரூ.1,017) , பெங்களூரு - கோவா (ரூ.1,162) மற்றும் கோவா- பெங்களூரு (ரூ.916) ஆகிய வழித்தடங்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது.
 


இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் அக்டோபர் 5-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், இந்த டிக்கெட்டுகள் ஜனவரி 15-ம் தேதி வரை செல்லுபடியாகும் எனவும் இவ்விரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இந்த சலுகைக்கான டிக்கெட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவிக்காத நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் 1.5 மில்லியன் இருக்கைகளுக்கான டிக்கெட்கள் என்பதை தெரிவித்துள்ளது.  

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ