Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

12 பில்லியனர்களை உருவாக்கிய மும்பை பல்கலைக்கழகம்!

'பில்லியனர்களை அதிகம் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள்' என்கிற அடிப்படையில் சிங்கப்பூரைச் சேர்ந்த சொத்து ஆராய்ச்சி நிறுவனமான வெல்த் எக்ஸ் மற்றும் சுவிஸ் பேங்க் யுபிஎஸ் நடத்திய ஆய்வறிக்கையில் மும்பை பல்கலைக்கழகத்திற்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.



உலக அளவில் உள்ள பில்லியனர்களின் ( சொத்து மதிப்பு ரூ.6,000 கோடியாக இருப்பவர்களே பில்லியனர்கள்), 12 பில்லியனர்கள் மும்பை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் என்பது இந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பென்சில்வேனியா, ஹார்வர்டு யுனிவர்சிட்டி மற்றும் யாலே யுனிவர்சிட்டி ஆகியவை அதிக பில்லியனர்கள் உருவாக்க பட்டியலின் முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கிறது. இந்த மூன்று யுனிவர்சிட்டிகளில் படித்து தற்போது உலக அளவில் பில்லியனர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கைகள் முறையே 25, 22 மற்றும் 20 ஆகும்.


இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி மும்பை பல்கலைக்கழகத்தை சார்ந்த கல்வி நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் (இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி) படித்தவர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

இந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ள இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் உலக அளவில் 35% பில்லியனர்கள் சாதாரண டிகிரி படிப்பு முடிக்காமலும், பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான். அதுமட்டுமல்லாமல்,  உலக அளவில் பில்லியனர்கள் அதிகம் உள்ள நாடுகளின் தர வரிசையில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது எனவும், 2013-ல் இருந்ததை காட்டிலும் உலக அளவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 7% அதிகரித்து 2,325-ஆக உள்ளது என்பதும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


நம்நாட்டின் மும்பை பல்கலைக்கழகமும், இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனமும்தான் (10-வது இடம்; 11 பில்லியனர்கள்) முதல் பத்து இடங்களில் இடம்பிடித்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் ஆகும். மற்ற எட்டு கல்வி நிறுவனங்களும் அமெரிக்காவை சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ