Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளுக்கு வங்கி சேமிப்பு கணக்கு - இன்று ஐசிஐசிஐ அறிமுகப்டுத்தியது!

பிரபல தனியார் வங்களில் ஒன்றான ஐசிஐசிஐ பேங்க் இன்று (24.9.14) பத்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வங்கி சேமிப்பு கணக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு செக் புத்தகம், டெபிட் கார்டு (அவர்களின் புகைப்படம் பதிக்கப்பட்டது) வழங்கப்படுகிறது. இதில் மாதம் குறைந்தபட்சம் 2,500 ரூபாய் இருக்கும்படியாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். 


" குழந்தைகளுக்காக ஸ்மார்ட் ஸ்டார் சேமிப்புக் கணக்கு உருவாக்கும் திட்டத்தில் இருந்தோம். அதை இன்று நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். இந்த சேமிப்பு கணக்கு குழந்தைகளுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தையும் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அநாவசிய செலவுகளை தவிர்த்து சேமிக்கும் பழக்கத்தை தூண்டுவதாகவும் இருக்கும்" என்று இந்த வங்கியின் செயல் இயக்குனர் ராஜிவ் சபர்வால் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர், "இந்த சேமிப்புக் கணக்கு வங்கியின் வங்கியின் செயல்பாட்டினை, அதாவது பிறருக்கு செக் வழங்குவது, கட்டணங்களை வங்கி வாயிலாக செலுத்துவது, மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது மற்றும் ஆர்.டி/எஃப்.டி சேமிப்புக் கணக்குகளை ஆரம்பிப்பது தொடர்பான விஷயங்களையும், ஏடிஎம் பயன்பாடு மற்றும் மொபைல் பேங்கிங் வசதி குறித்த விழிப்புணர்வையும் கற்றுத்தரும்" என்றார்.

வரவேற்கத்தக்க விஷயம்தான் இது!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ