Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நோயாளிகளின் மருத்துவ விவரங்கள் அதிக விலைக்கு விற்பனை!


சமீபத்தில் அமெரிக்க கள்ளச் சந்தையில் கிரெடிட் கார்டு நம்பரை விட நோயாளிகளின் மருத்துவ விவரங்கள் 10 மடங்கு அதிக விலைக்கு போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

"அமெரிக்க மருத்துவமனைகளின் ஹெல்த்கேர் ஆப்ரேட்டர்களான கம்யூனிட்டி ஹெல்த் சிஸ்டம்ஸ் (Community Health Systems) நிறுவனத்தின் கணினியில், சீனாவைச் சேர்ந்த ஹேக்கர் உள்நுழைந்து 4.5 மில்லியன் நோயாளிகளின் பெயர், அவர்களின் பிறந்த தேதி, கட்டண விவரங்கள், இன்ஷூரன்ஸ் பாலிசி எண், நோய் சம்பந்தப்பட்ட ஆய்வுக் குறியீடுகள் ஆகியவற்றை திருடி கள்ளச் சந்தையில் விற்பனை செய்திருக்கிறார்கள்" என அமெரிக்காவின் ஃபெடரல் பெரோ ஆஃப் இன்வஸ்டிகேஷன் (Federal Bureau of Investigation) அமைப்பு தெரிவித்துள்ளது.


மோசடிக்காரர்கள் இந்த விவரங்களை பயன்படித்தி போலியான ஐடி-க்களை தயாரித்து மருந்து உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கி மறு விற்பனை செய்கிறார்கள் என்கிற விவரமும், மேலும் அவர்கள் பாலிசி சார்ந்த விவரங்களை, நோயாளிகளின் விவரங்களை பயன்படுத்தி காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து கிளைம் பெற்றுக் கொள்ள முடியும் என்கிற விவரமும் தெரியவந்துள்ளது. இப்படி திருடும் ஒரு நோயாளியின் விவரங்களை மோசடிக்காரர்கள் அமெரிக்க கள்ளச் சந்தையில் 10 டாலருக்கு ( சுமார் ரூ.600) விற்று விடுகிறார்களாம். இது அமெரிக்க கிரெடிட் கார்டு நம்பருக்கு வழங்கும் விலையை விட பத்து மடங்கு அதிகம் என்பது ஆச்சர்யமான விஷயம்.

இது போன்ற திருட்டுகள் 2009-ம் ஆண்டில் 20 சதவிகிதமாக இருந்தது எனவும், அது 2013-ம் ஆண்டில் 40 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது எனவும் அமெரிக்காவின் Ponemon Institute மேற்கொண்ட சர்வேயில் தெரியவந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ