Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் - முகேஷ் அம்பானி முதலிடம்!

இந்த ஆண்டுக்கான இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலின் முதல் இடத்தை எட்டாவது முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தக்கவைத்துக் கொண்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1,41,600 கோடி ரூபாய். இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தை சன் பார்மா நிறுவனத்தின் திலீப் சாங்வி பிடித்திருக்கிறார்.



 இதற்கு முந்தைய ஆண்டில் இரண்டாவது இடத்தில் இருந்த லஷ்மி மிட்டல் நான்காம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார். விப்ரோ நிறுவனத்தின் அஜீஸ் பிரேம்ஜி மூன்றாவது இந்திய பணக்காரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் 82,800 கோடி ரூபாயாக இருந்த இவருடைய சொத்து மதிப்பு இன்றைய நிலையில் 98,400 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கிறது.


இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் மொத்த சொத்துமதிப்பு 21,84,000 கோடி ரூபாய் எனவும், இந்த மொத்த சொத்து மதிப்பு 2013-ல் 15,54,000 கோடி ரூபாயாக இருந்தது எனவும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ