Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் இன்ஷூரன்ஸ் பாலிசி: ஐஆர்டிஏ கருத்து..

 
 
''இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வெளியீடும் போது அந்த பாலிசிகளை ஆன்லைனில் விற்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் போது பல்வேறு பாலிசிகளை ஓப்பீட்டு பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்" என்று ஐஆர்டிஏ தலைவர் டி.எஸ். விஜயன் தெரிவித்துள்ளார். 
அசோசம் அமைப்பு நடத்திய டிஜிட்டல் மற்றும் மேம்பட்ட வெளிநாட்டு முதலீடு குறித்த கருத்தரங்கில் பேசுகையில் இதை தெரிவித்தார். 
 
''ஆன்லைன் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எளிதாக விற்க முடியும். ஆனால், பாலிசியில் உள்ள குழப்பம் மர்ரும் கேஒய்சி போன்றவற்றால் பலரும் அதனை எடுக்கமால் இருக்கிறார்கள். மொத்தம் விற்பனை செய்யப்படும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் ஒரு சதவிகிததான் ஆன்லைன் பாலிசிகளாக இருக்கின்றன. " என்று இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஒ பி.நந்தகோபால் தெரிவித்தார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ