Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய நறுமண பொருட்களின் ஏற்றுமதி!


உலக சந்தைகளில் காணப்பட்ட அதிக தேவையின் காரணமாக இந்தியாவின் நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-ஜூலை மாதங்களில் 10% அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பீட்டில் 11 சதவிகிதமும், டாலர் மதிப்பீட்டின்படி 6% அதிகரித்துள்ளது. மிளகு, மிளகாய், இஞ்சி, மஞ்சள், விதை வகைகள் மற்றும் மதிப்புக் கூட்டு பொருட்களின் ஏற்றுமதி அளவீடும், ரூபாய் மதிப்பின் அளவீடும் சிறப்பானதாக காணப்படுகிறது" என இந்தியாவின் ஸ்பைஸஸ் போர்டு தலைவர் ஜெயந்திலாக் தெரிவித்துள்ளார். 


மிளகாய் மற்றும் புதினா ஆகிய இரண்டும் உலக சந்தைகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு பொருட்களில் முதல் இடத்தில் இருக்கின்றன. ஏப்ரல் - ஜூன் கால கட்டத்தில் மட்டும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த நறுமணப் பொருட்களின் அளவு 2,71,280 டன்களாகும். இதனுடைய மதிப்பு 4,339 கோடி ரூபாய். இது இதற்கு முந்தைய ஆண்டில் 2,46,060 டன்களாகவும், அதன் மதிப்பு 3,892.72 கோடி ரூபாயாகவும் இருந்தது. 

மிளகாயின் தனிபட்ட ஏற்றுமதி அளவில் ஆறு சதவிகிதமும், மதிப்பீட்டின் அளவில் 10 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 99,000 டன் மிளகாய் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 938.80 கோடி ரூபாய். 
 

அதே போல, மிளகை அதன் ஏற்றுமதி அளவில் 10 சதவிகிதமும், ரூபாய் மதிப்பு அளவில் 41 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. அதே போல இஞ்சியின் ஏற்றுமதி அளவில் 47 சதவிகிதமும், மதிப்பீட்டு அளவில் 23 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மொத்த நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி 7,55,000 டன்களாகவும், அதன் மதிப்பு 12,304,90 கோடி ரூபாயாகவும் இருக்க வேண்டும் என டார்கெட் நியமிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நிலையிலிருந்து ஏற்றுமதி அளவின் அடிப்படையில்  36%, ரூபாய் மதிப்பில் 35%, டாலர் மதிப்பில் 36% அதிகமாகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close