Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மா சிமெண்ட் ரூ. 190

 

சிமெண்ட் விலை ஏற்றத்தால் சாமான்ய மக்கள் வீடு கட்டுவது கூடுதல் சுமையாகியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கட்டுமான செலவு அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மலிவு விலையில் சிமெண்ட் அறிமுகப்படுத்துகிறது. 
 
ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா திட்டங்களைப் போல மலிவு விலை சிமெண்ட் விற்பனையும் அம்மா மலிவு விலை சிமெண்ட் என்கிற பெயரில் அறிமுகமாக உள்ளது. ரூ 190 க்கு விற்கப்பட உள்ள இந்த சிமெண்டை வீடு கட்டுபவர்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். ஏழைகள் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் இதன் மூலம் பயன் அடைய முடியும். இந்த மலிவு விலை சிமெண்ட் பெற திட்ட அனுமதியுடன், கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து தலைவர் அல்லது வார்டு உறுப்பினர்கள் பரிந்துரைக்க வேண்டும். 
 
விரைவில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கு சிமெண்ட் நிறுவனக்களிடமிருந்து மொத்த கொள்முதல் செய்து  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ