Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழிலுக்கு இந்தியாவில் தடையில்லை: அமேசான் சிஇஓ

 இந்தியாவில் தொழில் செய்ய எந்த தடையும் இல்லை: அமேசான் சிஇஓ

 
இந்தியாவில் இ-காமர்ஸ் துறை வேகமாக வளர்ந்து வருவதால் இந்தியாவில் தொழில் செய்வதில் எந்த வித தடையும் இல்லை என அமேசான்.காம் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் எசோஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவில் 12000 கோடி ரூபாயை தொழில் விரிவுபடுத்தலுக்காக முதலீடு செய்துள்ள அமேசான்.காம் இந்தியாவில் இ-காமர்ஸ் துறையில் நிலையான இடத்தை பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் இருந்து ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் இந்த தொழிலுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இங்கு விற்பனையை அதிகரிக்க அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும். கூறப்பட்டுள்ளது.
 
இந்த வர்த்தகத்தை இந்தியாவில் நிலை நிறுத்தும் போது வேலைவாய்ப்புகளும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதும் அதிகமாகும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் இந்தியா முழுவது இந்த வர்த்தகம் குறுகிய காலத்தில் நிலைபடுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ