Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொத்த நேரடி வரி 2.60 லட்சம் கோடி வசூல்

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரை இந்தியாவில் மொத்த நேரடி வரி 2.60 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த செப்டம்பர் 26 வரையிலான கணக்கில் 3.37 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி கணக்கிடப்பட்டு அதில் வரிச்சலுகைகளில் குறைக்கப்பட்டது போக மீதம் 2.60 லட்சம் கோடி இந்தியா முழுவதும் நேரடி வரியாக வசூல் செய்யப்பட்டதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
 
இதில் கார்ப்ரேட் வரி 1.55 லட்சம் கோடியாகவும், தனிநபர் வரி 1.01 லட்சம் கோடியாகவும், மற்ற வரிகள் மூலமும் இந்த தொகை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
அரசு இந்த நிதியாண்டில் மொத்தம் 7.36 லட்சம் கோடி ரூபாய் மொத்த நேரடி வரியை இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும், இது சென்ற ஆண்டை விட ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ