Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய பங்குச் சந்தைகள்!

இந்திய பங்குச் சந்தைகள் இன்று  சரிவில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி  சுமார் 9 புள்ளிகள் சரிந்து 7958 என்ற நிலையிலும், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 29 புள்ளி சரிந்து 26597 என்ற நிலையிலும் வர்த்தகம் முடிவடைந்தது.  
 
இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, டிசிஎஸ் பங்குகள் சுமார் 3 சதவிகிதத்துக்கு மேலும், கெயில், இன்போஃசிஸ்  பவர் கிரிட் கார்ப் நிறுவனத்தின் பங்குகள் ஒரு சதவிகிதத்துக்கு மேல் விலை உயர்ந்து வர்த்தகமானது.  ஜிண்டால் ஸ்டீல், டிஎல்எஃப், கோட்டாக் மஹிந்திரா பங்குகளின் விலை 2 சதவிகிதக்கு அதிகமாக சரிந்து வர்த்தகமானது. 
 
அமெரிக்கா டாலருக்கு நிகாரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.47 என வர்த்தகமானது
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ