Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரெட்மி 1 எஸ்: வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதா?

 சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் ஷியோமி நிறுவனத்தின் தயாரிப்பான ரெட்மி 1எஸ் இன்று விற்பனைக்கு வருவதாக அதனை விற்கும் இணையதளமான ஃப்ளிப்கார்ட் அறிவித்திருந்தது. இதனால் பல லட்சம் பேர் இதனை வாங்குவதற்காக ஆன்லைனில் காத்திருந்ததுனர். சரியாக 2 மணிக்கு துவங்கிய விற்பனையில் சில நொடிகளில் அனைத்து புக்கிங்களும் முடிந்து விற்பனை முடிந்தது என்ற அறிவிப்பு கணினி திரையில் தோன்றியது.

 
 
ஒரே நேரத்தில் 3.5 லட்சம் பேர் ஆன்லைனில் காத்திருக்கிறார்கள் அவர்களில் யார் முதல் 40000 க்ளிக்குகளை செய்கிறார்களோ அவர்களுக்கு தான் கிடைக்கும் என்பதால் இன்று புக் செய்ய முடியவில்லை என்கிறார்கள் சிலர்.
 
இன்னும் சிலரோ இதெல்லாம் வெறும் ''ஹைப் மார்க்கெட்டிங்'' தான் இந்த போனை ஒரு முறை க்ளிக் செய்து விட்டால் இரண்டு நாட்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வாங்குங்கள் என்று கூவிகூவி விற்கிறார்கள் அதனால் இதற்கான மவுசு தற்போது குறைந்துவிட்டது. சில நாட்களில் இதுவும் கடைக்கு வந்துவிடும் என்று கூறுகின்றனர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close