Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டீசல் விலை குறையுமா?

 

டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைய வாய்ப்புள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் டீசல் விலை குறைவது இதுவே

 முதல் முறை. இதேபோல பெட்ரோல் விலையும் லிட்டருக்கு 1.75 ரூபாய் குறைகிறது. 

டீசல் மற்றும் பெட்ரோல் விலையை சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணைய் விலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து  இந்திய எண்ணை நிறுவனங்கள் நிர்ணாயிக்கிறன்றன.
 
ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு மேல் இருந்தது. இது படிப்படியாக குறைந்து  இப்போது 94 டாலராக உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
கடந்த 2013 ஜனவரி  17 ம் தேதி ஒவ்வொரு மாதமும் சுமார் 40-50 பைசா விலை உயர்த்திக் கொள்ளலாம் என எண்ணெய் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. ஆக மொத்தம் 19 தவணைகளில் ஒரு லிட்டர் டீசலுக்கு  11.81 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ