Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

 இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. இன்று அறிவிக்கப்பட்ட நிதி கொள்கையினால் சந்தை அதிகரித்து காணப்பட்டாலும், வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லாததால் 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த சென்செக்ஸ் சரிந்து 33 புள்ளிகள் மட்டும் அதிகரித்து 26630 என்ற அலவிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 5 புள்ளிகள் அதிகரித்து 7964 என்ற அளவிலும் முடிவடைந்தது.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.68 ரூபாயாகவும், 10 கிராம் தங்கத்தின் விலை 26,854 ரூபாயாகவும் வர்த்தகமாகியது. 
 
குறிப்பாக ஜீ என்டர்டெயிண்மெண்ட் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், டிஎல்எஃப் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ