Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தணிக்கைக்கு உட்பட்ட வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிப்பு!


தணிக்கைக்கு உட்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 
 
செப்டம்பர் 30,2014-ம் தேதி வரை  தணிக்கைக்கு உட்பட்ட வருமான கணக்கை தாக்கல் செய்யலாம். இதை  நவம்பர் 30,2014-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என கால அவகாசம் தரப்பட்டுள்ளது. 
 
 
அதேநேரத்தில் வரி கட்ட வேண்டியது இருந்தால் வட்டியில் சலுகை எதுவும் அளிக்கப்படவில்லை என மத்திய வருமான வரி வாரியம் தெரிவித்துள்ளது. நடைமுறைச் சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே இந்த கால நீடிப்பை வழங்கியிருப்பதாக வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ