Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவின் 400 பணக்காரர்கள்... அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம்பிடித்தனர்!

சமீபத்தில் அமெரிக்காவின் 400 பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில் அமெரிக்க வாழ் இந்தியர்களான சின்டெல் நிறுவனத்தின் பாரத் தேஸாய், தொழிலதிபர் ஜான் கபூர், ஸிம்போனி டெக்னாலஜியின் நிறுவனர் ரோமேஷ் வத்வானி, கவிதர்க் ராம் ஸ்ரீராம் மற்றும் வினோத் கோஸ்லா ஆகியோர் இடம்பிடித்திருக்கிறார்கள். இவர்களின் தரவரிசை முறையே 255, 261, 264, 350 மற்றும் 381 ஆகும்.


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ பில்கேட்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 4,86,000 கோடி ரூபாய். இவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பங்கு வர்த்தகத்தின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுகிற வாரன் பஃபெட் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 4,02,000 கோடி ரூபாய். இந்த பட்டியலை வெளியிட்டிருக்கும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் சொல்லியிருக்கிறது. இந்த 400 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 2.29 ட்ரில்லியன் டாலர் (ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி), இது கடந்த ஆண்டை விட 16,20,000 கோடி ரூபாய் அதிகம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close